கவர்னருக்கு எதிரான பதிவுகள்: நீக்க ஆம் ஆத்மிக்கு உத்தரவு

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: 'புதுடில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் புதிய பதிவுகளை வெளியிடக் கூடாது; ஏற்கனவே வெளியிட்ட பதிவுகளை நீக்க வேண்டும்' என, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுடில்லி துணை நிலை கவர்னராக உள்ள வி.கே. சக்சேனாவுக்கு எதிராக, ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து
கவர்னர், பதிவுகள்:  நீக்க ஆம் ஆத்மி  உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'புதுடில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் புதிய பதிவுகளை வெளியிடக் கூடாது; ஏற்கனவே வெளியிட்ட பதிவுகளை நீக்க வேண்டும்' என, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



புதுடில்லி துணை நிலை கவர்னராக உள்ள வி.கே. சக்சேனாவுக்கு எதிராக, ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.சக்சேனா காதி மற்றும் கிராம தொழில் வாரியத் தலைவராக இருந்தபோது, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில், 1,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி புகார் கூறி வருகிறது.


latest tamil news



இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதிஷி சிங், சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பாதக், சஞ்சய் சிங், ஜாஸ்மின் ஷா ஆகியோர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இவர்கள் மீது 2.5 கோடி ரூபாய் கேட்டு, சக்சேனா அவதுாறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.
மேலும், தனக்கு எதிரான சமூகவலைதள பதிவுகளை நீக்க உத்தரவிடும்படியும் அவர் கோரிஉள்ளார்.
இதை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், 'கவர்னருக்கு எதிராக புதிதாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது; ஏற்கனவே வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்க வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
28-செப்-202210:14:21 IST Report Abuse
jayvee இந்த கெஜ்ரிவால் IRS பணியில் இருந்தபோது, பல கார்பொரேட் கம்பெனிகளை மிரட்டி பல நூறு கோடிரூபாய்களை பெற்று அதை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளான் என்றும் தில்லியில் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன ..
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-செப்-202222:39:20 IST Report Abuse
Duruvesan AAP அவனுக்கு சூடு சொரணை எதுவும் கெடயாது, முட்டி போட்டு மன்னிப்பு கேட்பானுங்க
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27-செப்-202220:53:36 IST Report Abuse
Ramesh Sargam இந்த கெஜ்ரிவால் இருக்கானே, நீதிமன்றத்துக்கே எதிரான பதிவுகளையும் போடுவான். அவனை, அவன் கட்சியினரை அடக்கிவைக்கவேண்டியது நீதித்துறையின் பொறுப்பு.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
28-செப்-202206:46:14 IST Report Abuse
சாண்டில்யன்செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில், 1,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு சொல்வதற்கு பதில் சொல்ல வேண்டும் அதை விட்டு ஏதேதோ உளரலெல்லாம் வேலைக்காகாது...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
28-செப்-202218:22:39 IST Report Abuse
சாண்டில்யன்ராமன் சீதையைத்தான் தீயில் குளிக்க செய்தான் வண்ணாரையில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X