25,000 வாகனங்களை தயாரிக்க 'இசுசூ' இலக்கு

Added : செப் 27, 2022 | |
Advertisement
சென்னை:ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான 'இசுசூ' நடப்பு நிதியாண்டுக்குள், 25 ஆயிரம் வாகனங்களை இந்தியாவிலேயே தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களை ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டியில் உள்ள ஆலையில் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.'இசுசூ இந்தியா' நிறுவனம், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதை அடுத்து, அதன்
25,000, வாகனங்கள் தயாரிப்பு, 'இசுசூ' ,இலக்கு

சென்னை:ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான 'இசுசூ' நடப்பு நிதியாண்டுக்குள், 25 ஆயிரம் வாகனங்களை இந்தியாவிலேயே தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களை ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டியில் உள்ள ஆலையில் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


'இசுசூ இந்தியா' நிறுவனம், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதை அடுத்து, அதன் ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசிய இசுசூ இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வடாரு நக்கானோ கூறியதாவது:


இசுசூ இந்தியா நிறுவனம், வெற்றிகரமாக 10 ஆண்டுகளை கடந்துஉள்ளது. பல சவால்களை தாண்டி, இந்தியாவின் முதல் சாகச பிக்அப் டிரக்கான 'இசுசூ டி மேக்ஸ் வி- கிராஸ்' வாகனத்தை தயாரித்துள்ளது. இசுசூ நிறுவனத்துக்கு இந்தியா மிகவும் முக்கியமான ஒரு நாடாகும். தற்சார்பு இந்தியா திட்டத்தின் வாயிலாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் இசுசூ வாகனங்கள், அண்டை நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலை, இசுசூவின் உலகளாவிய தயாரிப்பு ஆலைகளில் முக்கியமான ஒன்றாக செயல்படும் என்றும் நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். இசுசூ இந்தியா நிறுவனம், எம்.யு.-எக்ஸ்., எஸ்.யு.வி., மற்றும் இசுசூ டி மேக்ஸ் பிக்அப் டிரக் என, இரு வாகன மாடல்களை மட்டுமே தற்போது இந்தியாவில் தயாரித்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X