சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று இன்று (செப்.27ம் தேதி) ஒரே நாளில் 537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (செப்.27) 537 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,81,516 ஆக அதிகரித்துள்ளது. இன்று( செப்.27) 502 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,37,998 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( செப்.27) கோவிட் பாதிப்பால் இன்று ஒருவரும் உயிரிழக்கவில்லை.இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38,046 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (செப் 26ம் தேதி ) 108 ஆக இருந்த நிலையில் இன்று(செப் 27 ம் தேதி) சென்னையில் 105 ஆக உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,472 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு பட்டியல்

