இங்கிலாந்து, பிரிட்டன், யூகே; மூன்றுக்கும் வித்தியாசம் என்ன?

Updated : செப் 28, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
பிரிட்டிஷ், இங்க்லிஷ் ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் இன்றும் நம்மில் பலருக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டுமே ஆங்கிலேயர்களைத் தானே குறிக்கின்றன, இதில் என்ன வித்தியாசம் எனக் கேட்டால், கிடையாது. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இதுபற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள நாம் வரலாற்றை சற்று புரட்டிப் பார்க்கவேண்டும்.ஐந்தாம் நூற்றாண்டில் இன்றைய ஜெர்மனி உள்ள இடத்தில் இருந்து
Britain, United kingdom, England, இங்கிலாந்து, பிரிட்டன், யுனைடட் கிங்டம், uk,  யூகே,

பிரிட்டிஷ், இங்க்லிஷ் ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் இன்றும் நம்மில் பலருக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டுமே ஆங்கிலேயர்களைத் தானே குறிக்கின்றன, இதில் என்ன வித்தியாசம் எனக் கேட்டால், கிடையாது. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இதுபற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள நாம் வரலாற்றை சற்று புரட்டிப் பார்க்கவேண்டும்.

ஐந்தாம் நூற்றாண்டில் இன்றைய ஜெர்மனி உள்ள இடத்தில் இருந்து சிலர் நடைபயணமாக பிரிட்டன் உள்ள பகுதியில் குடியேறினர். இவர்களே பின்னாட்களில் பிரிட்டனின் பூர்வக் குடிகளாகினர்.
லத்தீன், கிரீக் ஆகிய மொழிகளின் கலப்பால் உண்டான மொழிதான் ஆங்கிலம்.


latest tamil news


யுனைடெட் கிங்டம் என்பது பல நாடுகளின் ஒன்றியம். இதில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் அடங்கும். கிரேட் பிரிட்டன், பிரிட்டன் ஆகிய இரண்டுமே ஒன்றுதான். இங்கு வசிப்பவர்கள் 'பிரிட்டிஸ்' என தற்போது அழைக்கப்படுகின்றனர். 16ஆம் நூற்றாண்டில் உண்டான ஒப்பந்தத்தின்படி வேல்ஸ், யுனைடட் கிங்டமின் அங்கமாகியது. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்காட்டிலாந்து அரசு பிரிட்டனுடனான தொடர் ஒப்பந்தங்களின் அடிப்படையில் யுனைடட் கிங்டமின் அங்கமாக மாறியது.

ஒரு காலத்தில் அயர்லாந்து தனி நாடாக விளங்கியது. ஆனால் பிரிட்டன் மன்னர்கள் அயர்லாந்தை தங்கள் வசமாக்கி யுனைடெட் கிங்டமின் அங்கமாக்கினர். இந்தியா பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற போராடியதுபோல அயர்லாந்து குடிமக்கள் 1922 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசாட்சியை எதிர்த்துப் போராடினர்.


latest tamil news


மக்கள் போராட்டம் தீவிரமடைந்த அயர்லாந்தின் தெற்குப் பகுதியை பிரிட்டன் விடுவித்து தனி நாடாக்கியது. அதே சமயத்தில் அயர்லாந்தின் வடக்குப் பகுதியில் பிரிட்டனின் சர்வாதிகாரம் அதிகம் இருந்ததால் அதனை தங்கள் யுனைடெட் கிங்டமின் அங்கமாக்கியது. இதனால் வடக்கு அயர்லாந்து மட்டுமே இதன் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

இங்கிலாந்து நாடுதான் யுனைடெட் கிங்டமின் பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு. இங்குதான் தலைநகர் லண்டன் உள்ளது. இங்கிலாந்து என்கிற வார்த்தைக்கு 'தேவதைகளின் நிலப்பரப்பு' எனப் பொருள். இங்கிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடிமக்கள் இங்க்லீஷ் குடிமக்கள் எனவும், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டீஷ் குடிமக்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.


latest tamil news


ஆனால் இரு தரப்பினரும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவர். ஸ்காட்லாந்தில் ஸ்காட்டிஷ் மொழியையும், வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் மொழியையும் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இவற்றையே தற்போது பேசிவருகின்றனர். இவர்கள் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பார்க்கின்றனர். உதாரணமாக மஹாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மராட்டி-யை முதன்மை மொழியாகப் பேசி, இந்தியை இரண்டாம் மொழியாகப் பேசுவதுபோல இவர்கள் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக பாவித்தனர்.

பிரிட்டன்-அயர்லாந்துக்கிடையே பல சிறிய தீவுகள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஐசில் ஆஃப் மேன், ஹெப்ரிடிஸ், ஸ்கை, லூண்டி, போர்ட்லாந்து முதலிவை. இதுபோன்ற சில தீவுகளும் யுனைடட் கிங்டமுக்குள் அடங்குபவை. பிரிட்டன் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளை தங்கள் காலனி ஆதிக்கத்தில் ஏகாதிபத்தியம் செய்ததை நாம் மறந்திருக்க மாட்டோம்.

இதனாலேயே 'பிரிட்டன் அரசாட்சியில் சூரியன் என்றும் மறைவதில்லை' என்று பிரிட்டன் மன்னர் வம்சம் அப்போது மார் தட்டிக்கொண்டது. இன்றும் உலகம் முழுக்க பல சிறிய தீவுகளை பிரிட்டன் மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வருகிறது. அதாவது இந்தத் தீவுகளில் தனி அரசாட்சி இருந்தாலும் அவர்களின் சட்டங்களை பிரிட்டனால் கட்டுப்படுத்த முடியும்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் பிரிட்டிஷ் அண்டார்டிகா தீவு, தெற்கு ஜார்ஜியா தீவு, தெற்கு சாண்விட்ச் தீவுகள், இந்துமகா சமுத்திரத் தீவுகள் உள்ளிட்ட பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இவற்றில் மனித நடமாட்டமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (6)

ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-செப்-202218:07:34 IST Report Abuse
ramesh அருமையான விளக்கம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202212:45:45 IST Report Abuse
Lion Drsekar அருமை, இதை இப்படி விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு, இந்தியா. வந்தே மாதரம்
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
28-செப்-202210:42:28 IST Report Abuse
Yogeshananda உலக மகா கொள்ளைக்காரர்களின் பல பெயர்கள் இவையெல்லாம்
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
28-செப்-202212:40:29 IST Report Abuse
pradeesh parthasarathyஅப்புறம் எதுக்கு அங்கு வேலைக்கு போறதுக்கு கால் கடுக்க எம்பசி முன்னாள் தினமும் நிற்கிறீங்க ....?...
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
05-அக்-202216:30:54 IST Report Abuse
Shekarவேலைக்குத்தானே போறாங்க,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X