ஆன்மிகம்
திருப்பதி திருக்குடை திருவிழா: திருப்பதி திருக்குடை யானைகவுனி தாண்டுதல். சிறப்பு பூஜை, மாநகராட்சி பள்ளி மாற்று திறனாளி மாணவ, மாணவியருக்கு புத்தாடைகள் வழங்குதல், அன்னதானம் - முற்பகல், 11:00 மணி. இடம்: செம்பியம் நண்பர்கள் குழு, மதுரைசாமி மடம், 1வது தெரு, பெரம்பூர், சென்னை - 11. தொடர்புக்கு: 94444 36029.நவராத்திரி விழா வடபழநி ஆண்டவர் கோவில்: லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை 4:00 மணி. வேதபாராயணம் - மாலை 5:30 மணி. கொலு பாட்டு - மாலை 6:30 மணி. இசை கச்சேரி: ஏ.ஸ்ரீகாந்த் பாகவதர் குழுவினர் - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி, சென்னை - 26. கபாலீஸ்வரர் கோவில்: நவராத்திரி விழாவை முன்னிட்டு கற்பகாம்பாளுக்கு சரஸ்வத அலங்காரம் - நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை. மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை ஆர்யா நாகராஜன் பாட்டு. இரவு 7:15 மணி முதல் இரவு, 8:15 மணி வரை ஸ்ரீதேவி பரதநாட்டிய நிகழ்ச்சி. இடம்: மயிலாப்பூர். துர்க்கையம்மன் கோவில்: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை, 8:00 மணி. அங்காள பரமேஸ்வரி அலங்காரம் - மாலை, 5:00 மணி. துாப தீ ஆராதனைகள் - இரவு, 7:00 மணி. இடம்: 49, ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. தொடர்புக்கு: 044 - 2852 0369. அஷ்டலட்சுமி கோவில்: ஸ்ரீசுக்த ஆராதனம் -- காலை 9:30 மணி. பரதநாட்டியம்: ஆதிலட்சுமி பரதநாட்டியாலயா குழுவினர் மாலை 4:30 மணி. அம்பத்துார் நடராஜர் நாட்டியப் பள்ளி லாவண்யா செந்தில்வேல் குழுவினர், மாலை 6:30 மணி. வெண்ணைத் தாழி கண்ணன் திருக்கோலத்தில் உள்புறப்பாடு மாலை 6:45 மணி. இடம்: பெசன்ட் நகர், சென்னை -- 90. வடிவுடையம்மன் கோவில்: லட்சார்ச்சனை காலை மற்றும் மாலை. சொற்பொழிவு: 'நலன் தரும் நவராத்திரி,' - தேச.மங்கையர்கரசி - இரவு 7:30 மணி. இடம்: தியாகராஜ சுவாமி கோவில், திருவொற்றியூர், சென்னை -- 19. தொடர்புக்கு: 044 --- 2573 3703.ஆதிபுரீஸ்வரர் கோவில்: மஹா அபிஷேகம் - காலை 8:00 மணி. உற்சவர் அம்பாளுக்கு கம்பாநிதி அலங்காரம் - மாலை, 6:00. இடம்: பள்ளிக்கரணை, சென்னை - 100.சென்னை ஓம் கந்தாஸ்ரமம்: சண்டி மஹாயக்ஞம். கோமாதா பூஜை - காலை, 7:20 மணி. வாக்கு வல்லமை, செல்வம், சக்தி, முக்தி பெற திரிபுரசுந்தரி மூலமந்திரம் யக்ஞம் - காலை, 9:00 மணி முதல். மாதா புவனேஸ்வரிக்கு சாகம்பரி (காய்கறி) அலங்காரம் - மாலை 5:30 மணி. மஹா மேருவுக்கு கலசாபிஷேகம் - இரவு, 8:15 மணி. இடம்: 1, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073. தொடர்புக்கு: 73583 27967. சர்வமங்களா ராஜேஸ்வரி ஆசிரமம்: திரிசதி ஹோமம் - காலை, 9:00 மணி. சோடஷி ஹோமம் - இரவு, 7:00 மணி. - மாலை, 6:55. இன்னிசை: ஸ்ரீவித்யா ராமகிருஷ்ணன் - பாட்டு, இரவு, 7:00. இடம்: 16வது தெரு, டி.ஜி. நகர், நங்கநல்லுார், சென்னை - 600 061. தொடர்புக்கு: 99625 14134. பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: இன்னிசை: எஸ்.வி., இசை பள்ளி, மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 600 044. தொடர்புக்கு: 97106 43967. வீராத்தம்மன் கோவில்: சிறப்பு அபிஷேகம் - காலை, 6:30 மணி. சிறப்பு அலங்கார ஆராதனை - மாலை, 6:00 மணி. பரதநாட்டியம்: நிருத்தாலயா நடனம் மற்றும் இசைப் பள்ளி குழுவினர் - மாலை, 6:30 மணி. இடம்: தெய்வசிகாமணி தெரு, நியூ காலனி, பள்ளிக்கரணை, சென்னை - 600 100. பாரதிய வித்யா பவன்: இன்னிசை: லாவண்யா சுந்தரராமன் குழுவினர் பாட்டு - மாலை 5:45 மணி. முனைவர் சுந்தர் - பாட்டு, மாலை, 6:30 மணி. இடம்: 18, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்: உபன்யாசம்: ஆழ்வார்கள் வைபவம்: ஸ்ரீநிதி சுவாமிகள் - காலை 7:30 மணி. பஜனை: இல்லத்தின் முன்னாள் மாணவர்கள் குழு, மாலை 6:30 மணி. இடம்: 66, பி.எஸ்., சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. தொடர்புக்கு: 044 - 2499 0264. பஞ்சமி வாராகி அறச்சபை: சந்தன அபிஷேகம் - காலை 7:00 மணி. சிறப்பு யாகம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100. தொடர்புக்கு: 98418 14275. ஜெய் பிரத்யங்கிரா பீடம்: மஹா கணபதி பூஜை, சிறப்பு மஹா சங்கபம், கலச ஆவாஹனம், லலிதா சகஸ்ரநாமா அர்ச்சனை, தேவிக்கு நவாவர்ண பூஜை, தேவி மஹாமித்யம் பாராயணம், சதுர்வேத மந்திர புஷ்பாஞ்சலி ஹோமம், தீபாராதனை - காலை 7:00 முதல் முற்பகல் 11:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம், செங்கல்பட்டு. தொடர்புக்கு: 98400 86373. பார்த்தசாரதி பெருமாள் கோவில்: வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இரவு 7:00 மணிக்கு வேதவல்லி தாயார் ஷேச வாகன புறப்பாடு. இடம்: திருவல்லிக்கேணி. காமாட்சி அம்மன் கோவில்: நவராத்திரி முன்னிட்டு, அன்னபூரணி அலங்காரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள். நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: மாங்காடு. பொது சென்னை வடக்கு கோட்டம் வாடிக்கையாளர்கள் அஞ்சல் துறை குறை தீர்வு கூட்டம்: முற்பகல் 11:00 மணி. இடம்: அஞ்சல் துறை அலுவலகம், 4வது தளம், எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை - 8. கண்காட்சி புத்தக கண்காட்சி: காலை முதல் மாலை வரை. இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி. கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: காதி கிராமோத்யோக் பவன், அண்ணா சாலை, சென்னை -2. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை-2. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சகுந்தலா ஆர்ட் கேலரி, சி.பி., ஆர்ட் மையம், ஆழ்வார் பேட்டை. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.