கே.கே., நகர், :கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.,நகரில், காமராஜர் சாலை உள்ளது. இந்த சாலை, கே.கே.,நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இந்த சாலையில், அதிகளவிலான கடைகள் மற்றும் ஆட்டோ பழுதுபார்க்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இங்குள்ள பெரும்பாலான கடைகளுக்கு, வாகன நிறுத்தம் இல்லை.இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடைகளுக்கு வருவோர், சாலையை ஆக்கிரமித்து, வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.ஆட்டோ பழுதுபார்க்கும் கடைக்கு வரும் ஆட்டோக்கள், வரிசை கட்டி சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.