அமராவதி அணையில் மீன் வரத்து சரிவு: விற்பனையும் குறைவு

Added : செப் 27, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை அமராவதி அணையில், நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதாலும், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாலும், மீன் வரத்து குறைந்துள்ளது.உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணையில், மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது.வளர்ந்த மீன்கள், மீனவர்கள் வாயிலாக, பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி
அமராவதி அணையில் மீன் வரத்து சரிவு: விற்பனையும் குறைவு

உடுமலை:உடுமலை அமராவதி அணையில், நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதாலும், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாலும், மீன் வரத்து குறைந்துள்ளது.உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணையில், மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது.வளர்ந்த மீன்கள், மீனவர்கள் வாயிலாக, பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அணையில் தினமும், சராசரியாக, 400 கிலோ வரை மீன் பிடிக்கப்படும்.கடந்த இரு மாதமாக அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்படும் நிலையில், தற்போது மாலை நேரங்களில் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதால், மீனவர்கள் வலை விரிக்க அணைக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், அதிக பரப்பளவில் நீர் தேங்கியுள்ளதால், மீனவர் வலைகளில் மீன்களும் சிக்குவதில்லை. இதனால், அணையில் மீன் பிடிப்பு பெருமளவு குறைந்து, 100 கிலோ வரை மட்டுமே மீன்கள் சிக்குகின்றன.


அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர்மட்டம், 85 அடிக்கு மேல் உள்ளதால், மீனவர்கள் வலை விரிப்பதிலும், மீன்கள் பிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாலை நேரம் வலை விரித்து, அதிகாலை மீன்களுடன் வலை எடுத்து வர, அணைக்குள் மீனவர்கள் பரிசல்களில் சென்று வருவர். அணைப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், மீன் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. அதோடு, புரட்டாசி மாதம் என்பதால் விற்பனையும் குறைந்துள்ளது,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X