எக்ஸ்குளுசிவ் செய்தி

பி.எப்.ஐ.,யை ஆதரிக்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்!:அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
''பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகளை இந்தியாவில் முழுமையாக தடை செய்வதோடு, அவற்றை ஆதரிக்கும் தமிழக கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு ஹிந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்து, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; தனிநபர் பாதுகாப்பு
 பி.எப்.ஐ.,, தடை,ஹிந்து மக்கள் கட்சி   அர்ஜுன் சம்பத்

''பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகளை இந்தியாவில் முழுமையாக தடை செய்வதோடு, அவற்றை ஆதரிக்கும் தமிழக கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு ஹிந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.



அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்து, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு
தமிழக அரசே காரணம்.


குற்றம் சாட்டினார்



பி.எப்.ஐ., - எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகளுடன், தி.மு.க., ஓட்டுக்காக உறவு வைத்துள்ளது. இந்த இயக்கங்களை தடை செய்வதற்கான பணியில் என்.ஐ.ஏ., இறங்கியுள்ளது.இந்த அமைப்பினர், கேரளாவில் பாகிஸ்தான் போன்ற ஒரு சூழலை உருவாக்க முயற்சி செய்கின்றனர் என, கேரள முதல்வர் பினராயி விஜயனே, முதல்வர் கூட்டத்தில் ஒருமுறை குற்றஞ்சாட்டியுள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கூட்டங்களை, நாடு முழுதும் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.



அதற்கேற்ப, கேரளாவில் ஒரு கல்லுாரி பேராசிரியரின் கையை பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெட்டினர்.கேரளாவில், 5 லட்சம் பேரை திரட்டி கூட்டம் நடத்தினர். இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற, 'மிஷன் - 2047' என்ற திட்டத்தை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் தலித்துகள் ஒன்றிணைந்தால் இந்தியாவில், இஸ்லாமிய நாட்டை உருவாக்கி விடலாம் அல்லது இந்தியாவை பிரித்து விடலாம் என்பது தான், 'மிஷன் - 2047' திட்டத்தின் நோக்கமாகும்.




வலியுறுத்தல்



வன்முறை கலாசாரத்தை நம்பும் எஸ்.டி.பி.ஐ., - பி.எப்.ஐ., அமைப்புகள், வெளிநாடுகளுடன் தொடர்பில் இருப்பதால், இரண்டு அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என, கேரளா முதல்வர் உட்பட பல மாநிலத்தினர் வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பி.எப்.ஐ., தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது 'ஆப்பரேஷன் ஆக்டோபஸ்' என்ற திட்டத்தை இந்த அமைப்பினர் வைத்துள்ளனர்.



அதன் வாயிலாக நாடு முழுதும் தொடர் வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்துவது, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்வது உள்ளிட்ட சதித்திட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். சொல்லப்போனால் உள்நாட்டு யுத்தத்துக்கே தயாராக உள்ளனர்.இந்த சதி திட்டத்தை நிறைவேற்றும் முன், சில சோதனைகளை செய்து பார்ப்பர். அது தான் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீசி கார் கண்ணாடிகளை உடைத்தல் மற்றும் சிறு கலவரங்களை உருவாக்குதல் உள்ளிட்டவை.




அதிரடி சோதனை



இதை பயங்கரவாத அமைப்புகள், 'பிரேக்கிங் வின்டோ' என்பர். இப்போது தமிழகத்தில் நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அனைத்துமே இது தான்.இந்த 'ஆப்பரேஷன் ஆக்டோபஸ்' திட்டத்தை முறியடிக்கவே, என்.ஐ.ஏ., நாடு முழுதும், 20 மாநிலங்களில் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளது. இந்த அமைப்பினருக்கு, வெளிநாடுகளில் இருந்து பணம், ஆயுதம் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில், அமலாக்கத்துறையும் சேர்ந்து செயல்படுகிறது. இந்த சோதனையில் இதுவரை, 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.


ஒத்துழைப்பு



இதனால், தங்கள் அமைப்பினருக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து, உள்ளூரில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை, போராடத் துாண்டும் நடவடிக்கைகளில் இவ்வமைப்பினர் இறங்கியுள்ளனர். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன், இந்திய - முஸ்லிம் தலைவர்களை மத்திய அரசு அழைத்து பேச்சு நடத்தி, இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு பெற்றுள்ளது. அதன் பின்பே, 'ஆப்பரேஷன் மிட்நைட்' என்ற என்.ஐ.ஏ.,வின் சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.



இந்த நடவடிக்கை, முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதை அவர்களுக்கு அரசு தெளிவுபடுத்தியதால் தான், சாதாரண முஸ்லிம்கள் அமைதியாக உள்ளனர். பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ.,யுடன் தொடர்பில் உள்ள சில தமிழக அரசியல் கட்சிகள், அப்பாவி முஸ்லிம்களை துாண்டி விடும் வேலை செய்து, அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். தி.மு.க.,வே, சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, இந்த அமைப்பினருடன் தொடர்பில் உள்ளது. அதனால் தான் பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகளை கைது செய்வதில், இந்த அரசு மெத்தனமாக உள்ளது. பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், இப்போது பலரை கைது செய்துள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள, 14 பேரும் பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்கள்.


முழுமையாக தடை



ஆனால், அரசியலுக்காக பா.ஜ., கட்சியினரே இதை செய்து வருவதாக, வி.சி., தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் சீமான் போன்றவர்கள், உண்மையை மறைத்து, மக்களை திசை திருப்புகின்றனர்.தி.மு.க., அரசு, ஸ்டாலின் தலைமையிலான காவல் துறையே, இத்தனை பேரை கைது செய்திருக்கும் நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடும், இதே அவதுாறைப் பரப்பி வருகிறது. எனவே, இந்தியாவில் உள்ள பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகளை முழுமையாக தடை செய்வதோடு, அந்த அமைப்புகளை ஆதரித்து, மக்களை திசை திருப்பும் தமிழக கட்சிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinu - frankfurt,ஜெர்மனி
28-செப்-202210:30:53 IST Report Abuse
vinu அடுத்து ஆட்சி மாறும் பொது இது நிறைவேறும்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
28-செப்-202210:29:15 IST Report Abuse
Sampath Kumar ஏற்கனவே மூன்று முறை தடை செய்ய பட்ட ஆர்/எஸ்/எஸ் இயக்கத்தை ஆதரிக்கும் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202216:08:33 IST Report Abuse
DVRRஎப்போ??? முஸ்லீம் நேரு காங்கிரஸ் ஆட்சியிலா??முஸ்லீம் குரானில் என்ன எழுதியிருக்கின்றது முஸ்லீம் அல்லாதவர்கள் காபிர்கள் அவர்கள் கையை வெட்டு தலையை வெட்டு???அப்படித்தான் எல்லா முஸ்லிம்களுமா அவர்கள் மனிதர்களில்லை அப்படித்தானே. ஆர் எஸ் எஸ் இந்தியாவில் இந்தியாவின் நன்மைக்காக செயல்படுகின்றது??இந்தியாவில் இருந்து கொண்டே பாகிஸ்தான் வாழ்க என்று சொல்லும் முஸ்லிம்களுக்காக இல்லவே இல்லை என்பதால் அதை பங செய்ய வேண்டும் அப்படித்தானே முஸ்லிமே...
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
28-செப்-202209:22:32 IST Report Abuse
John Miller அர்ஜுன் சம்பத்திற்கு தலைக்கு மேலே மூலை இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X