நாகர்கோவில்:கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், நேற்று பல்வேறு அலுவலகங்களில் மின்தடை ஏற்பட்டது.
கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் தீப்பிடித்தது; தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின் அழுத்த பாதிப்பால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது. இதனால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பேரூராட்சி துணை இயக்குனர் அலுவலகம், புள்ளியல் துறை அலுவலகங்களில் மின் மீட்டர்கள் எரிந்து நாசமாகின.தீ விபத்தால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முழுமையாக மின்சாரம் தடைபட்டது.