இது தான் தி.மு.க., ஆட்சியின் லட்சணம்? : பா.ஜ., - எஸ்.சி., அணி தலைவர் குமுறல்

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
தென்காசி தனி தொகுதி தி.மு.க., -- எம்.பி., தனுஷ்குமார், வேலை நிமித்தமாக அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்கச் சென்றார். அப்போது அமைச்சர், ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தார். தனுஷ்குமாரை நிற்க வைத்தே பேசினார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கொந்தளிப்பு அதேபோல, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர்
 தி.மு.க., ஆட்சி, லட்சணம்? : பா.ஜ., , எஸ்.சி.,  குமுறல்


தென்காசி தனி தொகுதி தி.மு.க., -- எம்.பி., தனுஷ்குமார், வேலை நிமித்தமாக அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்கச் சென்றார். அப்போது அமைச்சர், ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தார். தனுஷ்குமாரை நிற்க வைத்தே பேசினார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


கொந்தளிப்புlatest tamil news
அதேபோல, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பொன்முடி, தி.மு.க.,வை சேர்ந்த தலித் இன ஒன்றிய பெண் தலைவரை காட்டி, 'இத பாரு... இங்க உட்கார்ந்திருக்கிற பொம்பள தலித் இனத்தை சேர்ந்தது தான்.'தி.மு.க., ஆட்சியில சமூக நீதி நிலை நாட்டப்படலைன்னு சொல்றாங்க. சமூக நீதி நிலை நாட்டப்படுகிறது என்பதற்கு சாட்சி தான் இந்த பொம்பள, இங்க உட்கார்ந்திருக்கிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சி' என்றுபேசினார். இது குறித்து தமிழக பா.ஜ., -- எஸ்.சி., அணி தலைவர் தடா பெரியசாமி கூறியதாவது:தலித்களுக்கு விரோத மாக, தி.மு.க.,வும், அதன் அரசும் செயல்படுகிறது என, பெரும்பாலான தலித் இன பிரதிநிதிகளும், மக்களும் வெகு காலமாகவே கொந்தளிப்பில்உள்ளனர். 'நீதிபதிகளாக தலித் இன பிரதிநிதிகள் வந்துள்ளனர். அது, தி.மு.க., போட்ட பிச்சை' என, முதல் தீயை பற்ற வைத்தவர், அக்கட்சியின் தலைமை நிலைய செயலர் ஆர்.எஸ்.பாரதி. அந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றது.
ஒரு கட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க., தலைமையால் அடக்கி வைக்கப்பட்டார்.


மோசமான செயல்இந்நிலையில் தான், தலித்களை அவமதிக்கும் வகையில், சமீபத்தில் இரு அமைச்சர்கள் நடந்து கொண்டுள்ளனர்.அமைச்சர் ராமச்சந்திரன், தன்னை ஒரு கடவுளாகவோ, கட்சியின் தலைவராகவோ கூட நினைத்து கொள்ளட்டும். ஆனால், அவரது இல்லம் தேடி சென்றவர், அவர் கட்சியை சேர்ந்த தனுஷ்குமார். என்ன தான் அவர், தலித் இனத்தை சேர்ந்தவர் என்றாலும், பல லட்சம் பேர் ஓட்டு போட்டு தேர்வு செய்த எம்.பி.,யை அசிங்கப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் எவ்வளவு பெரிய மோசமான செயல். அமைச்சர் பொன்முடி, அதற்கு மேலாக நடந்து கொள்கிறார்.தி.மு.க., ஆட்சியை புகழ நினைத்த பொன்முடி, மேடையில் அமர்ந்திருந்த தலித் இன பெண் ஒன்றிய தலைவரை கீழான நிலையில் பேசி, 'இது திராவிட மாடல் அடையாளம்' என்று குறிப்பிட்டிருக்கிறார். தலித்களை அவமானப்படுத்துவது தான், திராவிட மாடல் ஆட்சிக்கான லட்சணமா? இது தான், தலித் மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. தலித்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து விட்டு, யாசகம் கொடுத்தது போல பேசுவது, தலித்களை மேலும் அவமானப்படுத்துவது போன்றது தான்.
கடும் நடவடிக்கைதலித்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட உரிமை. அதை பூர்த்தி செய்ய வேண்டியது, ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமை.அதை செய்து விட்டு, சமூக நீதி என்பது போல தி.மு.க., தொடர்ந்து பேசுவது, கேடித்தனத்தின் உச்சம்.தலித் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, இப்படி நாடகம் போடும் தி.மு.க., தலைமை, தலித் மக்களை கேவலமாக பேசுபவர்கள், நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான தக்க பதிலடி கிடைக்கும். விரைவில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், இரண்டு அமைச்சர்கள் மீது புகார் கொடுக்க போகிறேன். இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
28-செப்-202214:58:13 IST Report Abuse
sankar நீங்க ஆளுற ஸ்டேட் லட்சணம் தான் ரொம்ப சூப்பர் ஆச்சே.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
28-செப்-202214:42:56 IST Report Abuse
 N.Purushothaman ஆளும் கட்சியில் உள்ளவர்கள் அதிகார மமதையில் தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்....இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது ...
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
28-செப்-202209:46:35 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலத்தில் உள்ள மின்சார வாரிய கோட்டத்தில் உள்ள பகுதிகளில் , மின் பராமரிப்பு பணிகள் சரியாக செய்யவில்லை மாறாக லஞ்சம் வாங்குவதில் அங்குள்ள ஊழியர் மற்றும் பொறியாளர்கள் கில்லாடிகள். ஆகையால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தீடிரென்று பல அலுவலகங்களுக்கு பார்வையிடுகிறார் ஆய்வு செய்கிறார், அதேபோல் மதுரை திருமங்கலம் மின்சாரவாரியத்தின் அலுவலர்களையும் பார்வையிட வேண்டுமென்பது அந்த ஏரியா மக்களின் கோரிக்கைகள். மதுரை திருமங்கலம் மின்வாரியத்திலுள்ள அனைத்து பொறியாளர்களின் லஞ்சம் வாங்கும் கொள்ளைக்கூடாரம் - அங்குள்ள பொறியாளர்கள் எல்லோரும் லஞ்சப்பணத்தை பகிர்ந்து கொள்கிறார்கள், மக்கள் மிகவும் முகம் சுளிக்குமளவிற்கு லஞ்சம் வாங்கும் கூடாரமாகவே திகழ்கிறது மதுரை திருமங்கலம் மின்வாரிய கோட்டத்திற்கு, மின்சார பராமரிப்பு பணிகளில்லாமல் திருமங்கலத்தில் அடிக்கடி மின்வெட்டு அதிகரித்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X