கணியாமூர் பள்ளி கலவரம்மேலும் 4 பேருக்கு 'குண்டாஸ்'

Added : செப் 28, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கலவரத்தில் ஈடுபட்ட க.மாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜாபர்அலி மகன் இப்ராகிம், 26; சின்னசேலத்தை சேர்ந்த குமார்
கணியாமூர் பள்ளி கலவரம்மேலும் 4 பேருக்கு 'குண்டாஸ்'

கள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கலவரத்தில் ஈடுபட்ட க.மாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜாபர்அலி மகன் இப்ராகிம், 26; சின்னசேலத்தை சேர்ந்த குமார் மகன் விஜய், 26; எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், 56; பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிவேல் மகன் ஜெயவேல், 22, ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எஸ்.பி.,யின் பரிந்துரையின் படி, கலெக்டர் ஷ்ரவன்குமார், இந்த நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.பள்ளி கலவரம் தொடர்பாக இதுவரை 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X