பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி :பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்ற அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையிலான
பொருளாதாரம்,  மகளிர் இட ஒதுக்கீடு, தீர்ப்பு ஒத்திவைப்பு


புதுடில்லி :பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்ற அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.



கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையிலான சட்டம், 2019ல் பார்லிமென்டில் நிறைவேறியது.



latest tamil news


எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான, 50 சதவீத இட ஒதுக்கீடுகளைத் தவிர, மீதமுள்ள 50 சதவீதத்தில் இந்த, 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டது.இதற்காக அரசியல் சாசனத்தில், 103வது திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும் இந்த வழக்கில் இணைந்து கொண்டது.தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, எஸ்.ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.



கடந்த 13ம் தேதி துவங்கி, மொத்தம் ஆறரை நாட்கள் விசாரணை நடந்தது.மத்திய அரசின் தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.வழக்கு தொடர்ந்தோர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ரவி வர்மா குமார், பி.வில்சன் உள்ளிட்டோர் வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துஉள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
28-செப்-202214:11:04 IST Report Abuse
Girija பிராமணர்களுக்கு எக்ஸ்ன்ட்ரிக் கோடாலிகள் அவர்கள் பிரிவுக்குள்ளேயே உள்ளது . இதே மற்ற ஜாதிக்காரராகள் அவர்கள் ஜாதிக்கெதிரான வழக்குகளில் ஆஜராகமாட்டார்கள்.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
28-செப்-202221:24:02 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஇந்த பத்து சதவிகிதத்தால் (சிக்கல்களைத் தாண்டி அது கிடைத்தால்) பயன்பெறப்போவது பிராம்மணர்கள் மட்டுமல்ல ..... ...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-செப்-202214:06:37 IST Report Abuse
Girija தள்ளி வைத்தாலே குளோஸ்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-செப்-202213:17:38 IST Report Abuse
S.Baliah Seer பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களில் முற்பட்ட இனம் என்று அல்ல எந்த பிரிவிலும் கண்டுபிடிக்க இயலாது.ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்து ஊழலால் பிறரை ஏமாற்றுவதில் வல்லவர்களான நம் மக்கள் எதையும் செய்து பிறருக்கு கிடைக்க வேண்டியதை தட்டிப்பறித்து விடுவார்கள்.அரசு வேலைக்குச் செல்வோர் மட்டுமே இளிச்சவாயர்கள் . அவர்கள் வருமானம் மட்டுமே அரசுக்குத் தெரியும்.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
28-செப்-202221:24:57 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஅறிவாளியே ......... தனியார் நிறுவனங்களில் பணிசெய்வோரின் வருமானம் அரசுக்குத் தெரியாதா ? அவர்கள் வருமான வரி கட்டுவதில்லையா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X