அமைச்சர் அண்ணன் தற்கொலை

Added : செப் 28, 2022 | |
Advertisement
சென்னை:அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் 63 நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னையை சேர்ந்தவர் தேவராஜ், 63; டெய்லராக வேலை செய்து வந்தார். அவருக்கு பார்வதி, 52, என்ற மனைவியும் லோகேஷ், 40, தினேஷ், 38, என இரு மகன்களும் உள்ளனர். அவர் ஹிந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன்.தேவராஜ், இதயகோளாறு தொடர்பாக 10 ஆண்டுக்கு முன் அறுவை சிகிச்சை
அமைச்சர் அண்ணன் தற்கொலை

சென்னை:அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் 63 நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


சென்னையை சேர்ந்தவர் தேவராஜ், 63; டெய்லராக வேலை செய்து வந்தார். அவருக்கு பார்வதி, 52, என்ற மனைவியும் லோகேஷ், 40, தினேஷ், 38, என இரு மகன்களும் உள்ளனர். அவர் ஹிந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன்.


தேவராஜ், இதயகோளாறு தொடர்பாக 10 ஆண்டுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும் உடல் நல பாதிப்பிற்கு ஆளாகி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதனால் மன உளச்சலுக்கு ஆளான அவர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி அஞ்சலி செலுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X