வீட்டுமனை பட்டா வழங்க கோரிதாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

Added : செப் 28, 2022 | |
Advertisement
ஆனைமலை:வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், கம்பாலபட்டி மக்கள் மனு கொடுத்தனர்.ஆனைமலை, கம்பாலபட்டி பகுதி மக்கள், ஊராட்சித்தலைவர் ராஜ்குமார் தலைமையில் நேற்று காலை, தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு, சமூக நலத்திட்ட தாசில்தார் குமரிஅனந்தனிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:ஊராட்சியில், கம்பாலபட்டி, அமணலிங்காபுரம், அரசூர்,
வீட்டுமனை பட்டா வழங்க கோரிதாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

ஆனைமலை:வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், கம்பாலபட்டி மக்கள் மனு கொடுத்தனர்.ஆனைமலை, கம்பாலபட்டி பகுதி மக்கள், ஊராட்சித்தலைவர் ராஜ்குமார் தலைமையில் நேற்று காலை, தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு, சமூக நலத்திட்ட தாசில்தார் குமரிஅனந்தனிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:ஊராட்சியில், கம்பாலபட்டி, அமணலிங்காபுரம், அரசூர், குருசாமியூர், கோடங்கிபட்டி, குள்ளேகவுண்டனுார், பாரமடையூர் மற்றும் பூவலபருத்தி ஆகிய எட்டு கிராமங்கள் உள்ளன.இவற்றில், 250க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, வீடு இல்லாததால் கடும் சிரமத்தில் உள்ளனர். அதிக வாடகை செலுத்தி வீடுகளில் வசிப்பதுடன், சிறிய வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இலவச பட்டா வழங்க வலியுறுத்தி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. ஆதிதிராவிட மக்களுக்கு விரைவில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.அதேபோல், பூவலப்பருத்தியில் பி.ஏ.பி., கால்வாய் அருகே, உடுமலை ரோட்டோரம் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு வரும் 'குடி'மகன்கள் பாட்டில்களை ரோட்டிலும், கால்வாயிலும் வீசுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X