சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பும் நடைமுறை, உச்ச நீதிமன்றத்தில் முதல்முறையாக நேற்று அமலானது. சோதனை முறையில் மூன்று மாதங்கள் செயல்படுத்தும் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.உச்ச நீதிமன்றத்தில், 2018ல் நடந்த ஒரு வழக்கு விசாரணையின்போது, முக்கிய வழக்குகள் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு வேண்டும் என்ற யோசனையை, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்
சுப்ரீம் கோர்ட் , வழக்கு விசாரணைகள்  ,முதல்முறை,நேரடி

புதுடில்லி :வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பும் நடைமுறை, உச்ச நீதிமன்றத்தில் முதல்முறையாக நேற்று அமலானது. சோதனை முறையில் மூன்று மாதங்கள் செயல்படுத்தும் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.உச்ச நீதிமன்றத்தில், 2018ல் நடந்த ஒரு வழக்கு விசாரணையின்போது, முக்கிய வழக்குகள் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு வேண்டும் என்ற யோசனையை, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முன்வைத்தார்.'நீதிமன்ற நடைமுறைகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், மக்களின் நம்பிக்கையை பெறவும், நேரடி ஒளிபரப்பை செய்ய வேண்டும்' என அவர் வலியுறுத்தினார்.


latest tamil news
அறிமுகம்


அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, 2018 செப்., 27ல் பிறப்பித்த உத்தரவில், அரசியல் சாசனம் தொடர்பான முக்கிய வழக்குகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் எனக் குறிப்பிட்டார்.கடந்த மாதம், 26ம் தேதி தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற என்.வி. ரமணா, தான் விசாரித்த கடைசி வழக்கை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான நீதிபதிகள் குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், அரசியல் சாசன அமர்வுகளில் விசாரிக்கும் முக்கிய வழக்குகளை, நேரடியாக ஒளிபரப்பு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், நான்கு ஆண்டு காத்திருப்புக்குப் பின், நேரடி ஒளிபரப்பு செய்யும் நடைமுறை உச்ச நீதிமன்றத்தில் நேற்று, முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைக்கு, 'யு டியூப்' சமூக வலை தளம் வாயிலாக, வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மூன்று மாதங்கள் சோதனை அடிப்படையில் இதை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, நேரடி ஒளிபரப்புக்கென, உச்ச நீதிமன்றத்துக்கு தனியாக 'சேனல்' உருவாக்கப்படும் என்று தலைமை நீதிபதி யு.யு.லலித் குறிப்பிட்டார்.


வரவேற்பு


நேற்று மூன்று அரசியல் சாசன அமர்வுகள் விசாரணை நடத்தின.இவை அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தொடர்பான வழக்கு, புதுடில்லியில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான வழக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கும்வழக்கு ஆகியவை நேரடியாக ஒளிபரப்பாகின.இந்த புதிய நடைமுறைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொலீஜியம் முடிவு

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திபங்கர் தத்தாவை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது, ஐந்து இடங்கள் காலியாக உள்ளன.உயர் நீதிமன்றங்களில் வசதி

உச்ச நீதிமன்றத்தில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு நேற்று துவங்கியது. அதே நேரத்தில் குஜராத் உட்பட ஆறு உயர் நீதிமன்றங்களில் இந்த வசதி ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர் நீதிமன்றத்தில், 2020 அக்டோபரில் சோதனை முறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் இருந்து வழக்குகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.இதைத் தொடர்ந்து, ஒடிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பாட்னா, மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202215:26:40 IST Report Abuse
duruvasar எங்க தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளும் நேரடி ஒளிபரப்பு செய்வதாக வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தேதி குறிப்பிடாத காரணத்தால் நடக்காமல் இருக்கிறது .ஆங்கிலேயர் நாட்டை விட்டு போய்விட்டதால் தான் இப்படி தொய்வு என நினைக்கிறார் .
Rate this:
Cancel
28-செப்-202211:48:45 IST Report Abuse
kulandai kannan Already the judges are playing to the gallery.
Rate this:
Cancel
Karthik - Dindigul,இந்தியா
28-செப்-202211:35:25 IST Report Abuse
Karthik வரவேற்கிறேன். முதலில் national herald மற்றும் INX Media வழக்குகளின் விசாரணைகளை ஒளிபரப்புங்கள். பப்புவோட பருப்பு எப்படி வெகுதுன்னும், கார்த்தி ப. சி. வெளியில ஆட்டிட்டு போற கைகளை உள்ள எப்படி அமுக்கிகிட்டு வச்சிருக்கானு பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X