'இந்தியாவின் வளர்ச்சி கதை இப்போது தான் துவங்குகிறது'

Added : செப் 28, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி : இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கதை இப்போது தான் துவங்குவதாக, 'அதானி' குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறியுள்ளார். ரூ.8 லட்சம் கோடிமேலும், அடுத்த 10 ஆண்டுகளில், புதிய எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பிரிவில், 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இது குறித்து, சிங்கப்பூரில் நடைபெற்ற உலகளாவிய தலைமை செயல் அதிகாரிகள்
 'இந்தியா  வளர்ச்சி ,கதை  ,துவங்குகிறது

புதுடில்லி : இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கதை இப்போது தான் துவங்குவதாக, 'அதானி' குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறியுள்ளார். ரூ.8 லட்சம் கோடிமேலும், அடுத்த 10 ஆண்டுகளில், புதிய எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பிரிவில்,
8 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, சிங்கப்பூரில் நடைபெற்ற உலகளாவிய தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில், அவர் மேலும் கூறிஉள்ளதாவது:அடுத்த 10 ஆண்டுகளில், குழுமம் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், புதிய எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பிரிவுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டு
உள்ளது.


latest tamil news




தற்போது, 20 'கிகாவாட்ஸ்' புதிப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, 45 கிகாவாட் ஹைபிரிட் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை வழங்க உள்ளோம். இந்த உற்பத்தி, ஒரு லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில், அதாவது சிங்கப்பூரை போல 1.4 மடங்கு அதிகமான பரப்பளவில் நடைபெற உள்ளது. இது, 300 கோடி மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை வணிகப்படுத்த வழிவகுக்கும்.
டிஜிட்டல் துறையை பொறுத்தவரை, தரவு மையங்களுக்கான சந்தை பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த துறை மற்ற துறைகளை விட அதிகளவில் எரிசக்தியை பயன்படுத்தி வருகிறது. நம்ப முடியாத வாய்ப்புஎங்களுடைய பசுமை தரவு மையங்கள் இந்த போக்கை மாற்றக்கூடியதாக இருக்கும். நான் சொல்ல விரும்பும் விஷயம், இந்தியா நம்ப முடியாத வாய்ப்புகள் நிறைந்த நாடு என்பதை தான். இந்தியாவின் உண்மையான வளர்ச்சி
கதை இப்போது தான் துவங்குகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohankumar - Trichy,இந்தியா
28-செப்-202215:33:13 IST Report Abuse
Mohankumar உனக்கு என்ன குறை...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
28-செப்-202215:16:30 IST Report Abuse
sankar வந்து எட்டு வருஷமாச்சே. கேலி பண்றீங்களா?
Rate this:
Cancel
Jet Sam - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
28-செப்-202214:03:17 IST Report Abuse
Jet Sam No No அதானியின் வளர்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X