'ஹிஜாப்'க்கு எதிரான போராட்டம்: ஈரானில் 75 பேர் உயிரிழப்பு

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
தெஹ்ரான் : ஈரானில், 'ஹிஜாப்' அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 'ஹிஜாப்' எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் துணி மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் கறுப்பு அங்கி கட்டாயமாக அணிய
Iran, Hijab, ChopOff Hair,Mahsa Amini,ஈரான், மாஷா அமினி, ஹிஜாப்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தெஹ்ரான் : ஈரானில், 'ஹிஜாப்' அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 'ஹிஜாப்' எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் துணி மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் கறுப்பு அங்கி கட்டாயமாக அணிய வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.



latest tamil news


இந்நிலையில், மாசா அமினி, 22, என்ற பெண், தலைமுடியை முழுமையாக மறைக்கும் விதமாக ஹிஜாப் அணியாததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.



கடந்த 10 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில், போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அதிபரை குறிப்பிட்டு 'சர்வாதிகாரி அயதுல்லா அலி கமேனி ஆட்சிக்கு சாவுமணி அடிப்போம்' என போராட்டக்காரர்கள் கோஷமிடத் துவங்கியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
28-செப்-202214:58:09 IST Report Abuse
 N.Purushothaman இஸ்லாமிய ஆண்கள் ஏன் ஹிஜாப் அணியக்கூடாது ? அது எவ்வளவு கடினமானது என்பது அப்போதாவது புரியுமே ...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28-செப்-202214:00:49 IST Report Abuse
Ramesh Sargam 'ஹிஜாப்' சம்பந்தமாக நமது இந்தியாவில், கர்நாடகாவில் ஒரு பிரச்சினை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் ஒரு சிலர் போராட்டத்தில் இறங்கினார்கள். படிக்கும் கல்லூரி வளாகங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் படிக்கும் மாணவிகள் 'ஹிஜாப்' அணியக்கூடாது என்று கூறினார்கள். அது நல்லதுதானே. அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவித்தார்கள்? இப்பொழுது ஒரு முஸ்லீம் நாட்டிலேயே, இரானிய மக்களே 'ஹிஜாப்'க்கு எதிரான போராட்டம் செய்கிறார்கள். நமது நாட்டு எதிர்ப்பாளர்கள் இதற்கு என்ன செய்வார்கள்? இங்கு நம் நாட்டில் போராட்டம் செய்த ஹிஜாப் ஆதரவாளர்கள், தைரியம் இருந்தால், ஈரானுக்கு சென்று ஈரான் நாட்டு அரசுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்களா, அங்குள்ள மக்களை எதிர்த்து? எங்கே கொடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம்?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
28-செப்-202213:54:48 IST Report Abuse
சீனி கோடி கோடியாக ஈரானில் பெண்கள் வீதிக்கு வந்து புர்க்காவை எரித்து வருகின்றனர். எனவே நம் நாட்டில் சிலைகளை உடைக்கும் மனநோயாளிகள் இந்த செய்தியை படிக்கவும். இந்திய செய்திச் சானல்களும் ஸ்தம்பித ஈரான் செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பினால் இந்தியாவுக்கும் நல்லது. நம் நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் சுதந்திரமாக்க, அவர்களும் மற்றவர்கள் மாதிரி உடையணிந்து படித்து வேலைக்கு சென்று சம்பாதிக்க, அரசியல் சாசன சட்டத்திருத்தம் உடனே கொண்டுவரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X