காஸ் சிலிண்டர் பதிவு 15 சதவீதம் அதிகரிப்பு; ஞாயிற்று கிழமையும் 'டெலிவரி'

Added : செப் 28, 2022 | |
Advertisement
சென்னை : பண்டிகை காலம் என்பதால், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவு, 10 - 15 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்று கிழமையும் சிலிண்டர் 'டெலிவரி' செய்யும் பணியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன.பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில் 2.40 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள்
gas, cylinder, Sunday Delivery

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பண்டிகை காலம் என்பதால், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவு, 10 - 15 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்று கிழமையும் சிலிண்டர் 'டெலிவரி' செய்யும் பணியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன.

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில் 2.40 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.அவர்களுக்குதினமும் சராசரியாக,4 - 5 லட்சம் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.அதில், இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டும், சென்னையில் 80 ஆயிரம் உட்பட, மாநிலம் முழுதும், 2.50 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்கிறது.



latest tamil news


பெரும்பாலான காஸ் ஏஜன்சிகள் வார விடுமுறையான ஞாயிற்று கிழமைகளில் செயல்படுவதில்லை. இதனால், அன்று சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை.தற்போது நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என, தொடர்ந்து பண்டிகைகள் வர உள்ளன. இதனால் காஸ் சிலிண்டருக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, பலரும் சிலிண்டர் வேண்டி, எண்ணெய் நிறுவனங்களிடம் முன்பதிவு செய்து வருவதால், சிலிண்டர் முன்பதிவு வழக்கத்தை விட கூடுதலாக, 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.



இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மூன்று எண்ணெய் நிறுவனங்களும் சிலிண்டர் பதிவு செய்த, இரு நாட்களுக்குள் வீடுகளில் டெலிவரி செய்கின்றன.சிலிண்டர் நிரப்பும் ஆலைகளில், தேவையான அளவுக்கு காஸ் இருப்பு உள்ளது; தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.தற்போது, சிலிண்டர் முன்பதிவு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு உடனே சிலிண்டர் கிடைக்க, ஞாயிற்று கிழமையும் டெலிவரி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X