டமாஸ்கஸ்: மேற்காசிய நாடான லெபனானில் உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் அங்குள்ள ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். மத்திய தரைக்கடலில் சட்டவிரோதமாக படகுகளில் செல்லும் பலர், விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
கடந்த வாரம் 150 பேருடன் லெபனானில் இருந்து சென்ற படகு, அதன் அண்டை நாடான சிரியாவின் கடற்கரை நகரான டார்டவுஸ் அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. உடனடியாக 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில், இதுவரை 10 குழந்தைகள் உட்பட 100 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது.