கூடலூரில் நாளை ராகுல் நடைபயணம்

Added : செப் 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : 'நீலகிரி மாவட்டம் கூடலுாரில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், நாளை நடைபயணம் மேற்கொள்கிறார்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: இந்திய தேசிய ஒற்றுமைக்காக, தமிழகத்தில் ராகுல் துவங்கிய முதல் கட்ட நடைபயணம், 59 கி.மீ., துாரம் கன்னியாகுமரி மாவட்டத்திலும்; 450 கி.மீ., துாரம் கேரள மாநிலத்திலும் நடந்தது.வரும், 29ம் தேதி நீலகிரி மாவட்டம்,
Bharat Jodo Yatra, Rahul Gandhi, Congress, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, Rahul,

சென்னை : 'நீலகிரி மாவட்டம் கூடலுாரில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், நாளை நடைபயணம் மேற்கொள்கிறார்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: இந்திய தேசிய ஒற்றுமைக்காக, தமிழகத்தில் ராகுல் துவங்கிய முதல் கட்ட நடைபயணம், 59 கி.மீ., துாரம் கன்னியாகுமரி மாவட்டத்திலும்; 450 கி.மீ., துாரம் கேரள மாநிலத்திலும் நடந்தது.வரும், 29ம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலுாருக்கு வருகிறார் ராகுல். அன்று மாலை 4:00 மணிக்கு கூடலுார் ஆமைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு அருகில் உள்ள கோழி பாலத்திலிருந்து நடைபயணத்தை தொடர்கிறார்.



அப்பகுதியில் மட்டும், 6 கி.மீ., பயணம் மேற்கொள்ளும் அவர், மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அவரது நடைபயணத்தின் வாயிலாக, கூடலுார் பகுதியில் உள்ள படுகர் இன மக்களையும், அங்கே வாழ்கிற மொழி சிறுபான்மை மக்களையும், நேரடியாக சந்திக்கிற வாய்ப்பு ராகுலுக்கு கிட்டியிருக்கிறது. இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
28-செப்-202218:26:13 IST Report Abuse
வாய்மையே வெல்லும் யாராவது குடலூரு குண்டுமல்லி கொடுத்து இந்த பாதி கிழத்தை திருமணம் முடிக்க ஏற்பாடு செய்யுங்க ப்பா... இந்த நடைபயண டிராமா ஆட்டம் தாங்கமுடியாத அளவுக்கு போயிட்டு
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202208:50:43 IST Report Abuse
அசோக்ராஜ் காஸ்ட்யூம் எல்லாம் ரெடியா? பழக்குடியுடன் டேன்ஸ் போடுவது கட்டாயம் ஆச்சே? முடிந்தால் மண்ணின் மைந்தி சாய் பல்லவியை ஆட்டத்தில் சேர்க்கணும். லைக்ஸ் அள்ளும். முக்கியமாக கரூர் திருஷ்டியைத் தவிர்க்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X