'பா.ஜ.,வை ஒடுக்க தமிழக அரசு முயல்வது நல்லதல்ல!'

Added : செப் 28, 2022 | கருத்துகள் (45) | |
Advertisement
சென்னை: ''பா.ஜ., ஜனநாயக வழிகளில் மக்களின் குரலை உயர்த்தி வருகிறது; அதை ஒடுக்க தமிழக அரசு முயல்கிறது; இது, நல்லதல்ல,'' என, மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே தெரிவித்தார்.சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.,வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே, நேற்று அளித்த பேட்டி: 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' எனப்படும், பி.எப்.ஐ., அமைப்பினரின்
Ashwini Kumar Choubey, Minister, BJP, DMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''பா.ஜ., ஜனநாயக வழிகளில் மக்களின் குரலை உயர்த்தி வருகிறது; அதை ஒடுக்க தமிழக அரசு முயல்கிறது; இது, நல்லதல்ல,'' என, மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே தெரிவித்தார்.

சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.,வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே, நேற்று அளித்த பேட்டி: 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' எனப்படும், பி.எப்.ஐ., அமைப்பினரின் பெட்ரோல் குண்டு தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.



latest tamil news


பா.ஜ.,வினர், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மீதான தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள முடியாது. பா.ஜ., தொண்டர்கள் யாருக்கும் அச்சப்பட வேண்டாம். நாங்கள் சமாதான புறாக்களை பறக்க விடுவதில்லை; சிறுத்தைகளை விடுகிறோம். மக்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுவோம். தமிழக மக்கள் அமைதியை விரும்புவர். ஆனால், தற்போதைய தமிழக அரசு, காங்கிரஸ் தோழமையின் கொள்கையால் பயங்கரவாதத்தை பரப்புகிறது.



தமிழகத்தில் இருந்து யாத்திரையை காங்கிரஸ் துவங்கியது. அக்கட்சி தற்போது உடைந்து கொண்டிருக்கிறது. பா.ஜ., ஜனநாயக வழிகளில் மக்களின் குரலை உயர்த்தி வருகிறது. தமிழக அரசு, அதை ஒடுக்க முயல்கிறது; இது, நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
28-செப்-202220:24:37 IST Report Abuse
r.sundaram அன்று துக்ளக் பத்திரிகைக்கு அப்பா செய்ததை இன்று தனயன் பிஜேபிக்கு செய்கிறார், வாழ்க அவர்தம் கொற்றம்.
Rate this:
Cancel
Viswanathan - Thanjavur,இந்தியா
28-செப்-202217:34:38 IST Report Abuse
Viswanathan இவனுகளுக்கு இதே கேடுகெட்ட பிழைப்புதானா...
Rate this:
Cancel
Viswanathan - Thanjavur,இந்தியா
28-செப்-202217:34:15 IST Report Abuse
Viswanathan வடக்கேயிருந்து தினம் ஒருத்தன் வந்து கூவுறானுங்களே ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X