திருமலை பிரம்மோற்சவத்திற்கு காஞ்சிபுரம் பட்டு சேலை 'ரெடி'

Added : செப் 28, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : திருமலை பிரம்மோற்சவத்திற்கு, காஞ்சிபுரம் நகரில் இருந்து, பிரம்மாண்டமான பட்டு சேலை, நெசவு செய்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.திருமலையில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் நேற்று துவங்கி, அக்.5ம் தேதி வரை நடக்கிறது. பிரம்மோற்சவத்திற்கு சென்னையைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர், காஞ்சிபுரம் பகுதியில் நெய்யப்படும் பட்டு சேலை வழங்க உள்ளார். இந்த பட்டு சேலை 21.5 முழத்தில்,
Kanchipuram, Brahmotsavam, Tirupati Elummalayan, காஞ்சிபுரம், திருமலை, பிரம்மோற்சவம், பட்டு சேலை, திருப்பதி ஏழுமலையான்,Tirumala,  Silk Saree,

காஞ்சிபுரம் : திருமலை பிரம்மோற்சவத்திற்கு, காஞ்சிபுரம் நகரில் இருந்து, பிரம்மாண்டமான பட்டு சேலை, நெசவு செய்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

திருமலையில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் நேற்று துவங்கி, அக்.5ம் தேதி வரை நடக்கிறது. பிரம்மோற்சவத்திற்கு சென்னையைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர், காஞ்சிபுரம் பகுதியில் நெய்யப்படும் பட்டு சேலை வழங்க உள்ளார். இந்த பட்டு சேலை 21.5 முழத்தில், 50 இஞ்ச் அளவு அகலத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.



திருப்பதி ஏழுமலையான் உருவங்கள் மற்றும் சயன கோலத்தில் ஸ்ரீரங்கநாதர் உருவம் பொறிக்கப்பட்ட சேலை மிகவும் நேர்த்தியாக நெசவு செய்யப்பட்டு உள்ளது. இது காண்போரின் கண்களை கவரும் விதமாக உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தோப்பு தெருவைச்சேர்ந்த பட்டு சேலை நெசவாளர் எஸ். குமரவேல் கூறியதாவது:



ஆண்டுதோறும், திருப்பதி புரட்டாசி மாத பிரம்மோற்சவத்திற்கு, சென்னைச்சேர்ந்தவர் பட்டு சேலை சாத்துவது வழக்கம். நான், அவருக்கு மூன்றாவது ஆண்டாக பட்டு சேலை நெய்து கொடுக்கிறேன்.நானும் என் மனைவி கலையரசி இணைந்து, சங்கு, சக்கரத்துடன் ஏழுமலையான் உருவமும், முந்தானையில் சயன கோலத்தில் ஸ்ரீ ரங்கநாதர் பள்ளிக்கொண்டிருக்கும் காட்சியை வடிவமைத்தோம்.



எட்டு நாட்களில், இரவு, பகலாக நெசவாளர்கள் உதவியுடன் பட்டு சேலை நெய்யப்பட்டு உள்ளது. 1 கிலோ 350 கிராம் எடையுள்ள சேலை, மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X