வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சராசரியை விட அதிகளவில் பெய்யும் என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பருவமழை குறித்த முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்படி, அரியலுார், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலுார், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, துாத்துக்குடி, திருப்பத்துார் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், சராசரி மழையளவு கிடைக்கும்.
![]()
|
சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலுார், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிபேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலுார் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், சராசரியை விட அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.