'ப்ரீ பயர் கேம்' குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை: 'ப்ரீ பயர் கேமில், ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதில் வன்முறையை துாண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மதுரை: 'ப்ரீ பயர் கேமில், ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதில் வன்முறையை துாண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.



latest tamil news




தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:


கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்த எனது மகள் மாயமானார். உறவினர் வீடுகளில் தேடினோம். கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசில் புகார் செய்தோம்.மகளை தேட நடவடிக்கை எடுக்கவில்லை. மொபைல் போனில் இணையதள, 'ப்ரீ பயர் கேம்'களை விளையாடும் பழக்கம் மகளுக்கு இருந்தது.

இதில் ஒரு ஆணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையானவர். எனது மகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார். போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. மகளை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. இதையடுத்து, மனுதாரர் மகள் ஆஜரானார்.

நீதிபதிகள் தெரிவித்த கருத்து:
கொரோனா ஊரடங்கு காலத்தின் போது, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. அப்போது, மாணவர்கள் பலர் மொபைல் போன் மோகத்தில், 'ஆன்லைன்' விளையாட்டில் ஈடுபட்டனர்.

இளைய தலைமுறையினர் நடைமுறை வாழ்விலிருந்து விலகி, தனி உலகை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும், அவை வெவ்வேறு பெயர்களில் இணையதளத்தில் ஊடுருவி வந்துவிடுகின்றன. முற்றிலும் நீக்கம் செய்ய இயலவில்லை.குடும்பத்தில் பெற்றோர், குழந்தைகள் மொபைல்போனில் மூழ்கியுள்ளனர்.

மனம் விட்டு பேசுவதில்லை. ப்ரீ பயர் கேமில் ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள், குழந்தைகளின் மனதில் வன்முறையை துாண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.


latest tamil news




மனுதாரரின் மகள், 'தாயுடன் செல்ல விரும்புகிறேன். தடுத்து வைத்திருந்த நபருடன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்ளமாட்டேன். படிப்பில் கவனம் செலுத்துவேன்' என்றார்.

இதைக்கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மாணவியை மீட்டு போலீசார் பாதுகாத்து வைத்துள்ளனர். பின், மனுதாரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியை தடுத்து வைத்திருந்த நபர், எதிர்காலத்தில் மாணவிக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.

அவர் மாணவியிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும். அந்நபரிடம் போலீசார் விசாரிக்க வேண்டும். மாணவி விருப்பப்படி மனுதாரருடன் செல்லலாம்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202216:52:52 IST Report Abuse
அப்புசாமி அது ரத்தமில்லை. தக்காளி சட்னி கூட இல்லைன்னு சொல்லி வளருங்க.
Rate this:
Cancel
Ranganathan -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202212:25:55 IST Report Abuse
Ranganathan 0 ..........
Rate this:
Cancel
28-செப்-202208:25:59 IST Report Abuse
அப்புசாமி பின்னாடி அக்னி வீரர்களாப் போவாங்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X