சென்னை, புறநகர் பகுதிகளில் தொடரும் வன்முறை: பெட்ரோல் குண்டு வீச்சை தொடர்ந்து சிலை உடைப்பு

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு, தலைவர்கள் சிலை உடைப்பு என வன்முறைகள் தொடர்வதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.பயங்கரவாத அமைப்புகளுடன், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு, தலைவர்கள் சிலை உடைப்பு என வன்முறைகள் தொடர்வதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.



latest tamil news




பயங்கரவாத அமைப்புகளுடன், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்படி, தமிழகம் உட்பட நாடு முழுதும் தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், சதி திட்டம் மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன; 106 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி என பல மாவட்டங்களில், பா.ஜ., அலுவலகம் மற்றும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடு, அலுவலகம், வணிக நிறுவனங்களை குறிவைத்து 15க்கும் மேற்பட்ட இடங்களில், மர்ம நபர்கள் 'பெட்ரோல்' குண்டு களை வீசினர்.



இதனால் பதற்றம் ஏற்பட்டது.சென்னையில் சிட்லபாக்கம், ராஜ ராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்த, தாம்பரம் பகுதி ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் சீதாராமன், 63, வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.'வன்முறை செயல்களில் ஈடுபடுவோர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார்.



மேலும் 'பெட்ரோல் 'பங்க்'குகளில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கக்கூடாது' என அறிவுறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவர்களுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


latest tamil news




இந்நிலையில், சென்னையில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறிஉள்ளன. இதனால், சென்னையில், பாரிமுனை, மண்ணடி, திருவல்லிக்கேணி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இப்பகுதிகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.



சென்னையில் உள்ள 60க்கும் மேற்பட்ட தலைவர்களின் சிலைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அரசியல் சார்பு ரவுடிகள் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.சென்னை மட்டுமல்லாது, காஞ்சிபுரம், ஆவடி ஆணையரக எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தற்போது ஏற்பட்டு உள்ள அசாதாரண சூழலுக்கு ஏற்ப, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.'வார விடுமுறை தவிர்த்து, தேவையின்றி போலீசார் பணிக்கு வருவதை தவிர்க்கக் கூடாது. காவல் நிலையங்களில் எப்போதும் போலீசார் இருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



காவல் நிலைய எல்லைகளில், செக்டார் வாரியாக ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம்.லாட்ஜ் மற்றும் மேன்ஷன்கள் போலீசாரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தங்கள் பகுதிகளில், சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


கொடி கம்பம் அகற்றம்



மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு முன் பா.ஜ., சார்பில் கொடி கம்பம் நடப்பட்டது. அனுமதி இல்லாமல் கொடி கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சியினர், போலீஸ் பாதுகாப்புடன் கொடி கம்பத்தை அகற்றினர். பா.ஜ., வை சேர்ந்த, 15 பேர் மீது மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், கொடி கம்பத்தை மீண்டும் நடக்கோரி, பா.ஜ., மாவட்ட தலைவர் சாய்சத்யன் தலைமையில், அக்கட்சியினர், மாநகராட்சி வார்டு அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.மவுன்ட் போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், உதவி கமிஷனர் புகழ்வேந்தன் ஆகியோர், 'கொடி கம்பம் வைக்க மூன்று இடங்களை எழுதி கேட்டால், உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர். இதையடுத்து, பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர்.


latest tamil news





13 வீடுகளுக்கு பாதுகாப்பு



செங்கல்பட்டு மாவட்டத்தில் பா.ஜ., உள்ளிட்ட அமைப்பினருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து, மாவட்ட காவல் துறை கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட, செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கோட்டத்தில் உள்ள, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.முக்கிய நிர்வாகிகள் 13 பேரின் வீடுகளுக்கு, தலா இரண்டு போலீசார் என, 26 போலீசார், 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், உடனுக்குடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, தகவல் தெரிவிக்கின்றனர். இவ்வாறு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காஞ்சியில் 34 இடங்கள்



இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 34 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் வாகன சோதனையும் நடந்து வருகிறது. சந்தேகப்படும் படியான நபர்கள் இருப்பது தெரிய வந்தால், விசாரணை செய்த பின் அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


எம்.ஜி.ஆர்., சிலை சேதம்



சென்னை, தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை, 2006ல் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், சிலையின் மூக்கு பகுதியை சேதப்படுத்தி உள்ளனர்.இது தொடர்பாக, அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆதிராஜாராம், தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களுடன் வந்து சிலையை பார்வையிட்டு சென்றார். சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-செப்-202222:57:43 IST Report Abuse
Bhaskaran திராவிடமாடல் சூப்பர்
Rate this:
Cancel
28-செப்-202222:13:16 IST Report Abuse
அப்புசாமி கருப்புக்கண்ணாடி க... களைப் பாத்தாலே பத்திக்கிட்டு வருது.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
28-செப்-202220:48:56 IST Report Abuse
abibabegum பன்னீர்செல்வதிற்கு ,முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.பழனிசாமிக்கு , இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி நல்லா இருக்கு .சூப்பர் சூப்பர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X