போலீஸ் கண்காணிப்பில் பெட்ரோல் பங்க்: தடையை மீறினால் உரிமம் ரத்து!

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை: மதுரையில் தடையை மீறி பாட்டிலில் பெட்ரோல் விற்ற பங்க்கின் உரிமத்தை ரத்து செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் விற்கக்கூடாது என பங்க் உரிமையாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே போலீசார் தடைவிதித்திருந்தனர். ஆனால் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஹிந்து

மதுரை: மதுரையில் தடையை மீறி பாட்டிலில் பெட்ரோல் விற்ற பங்க்கின் உரிமத்தை ரத்து செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் விற்கக்கூடாது என பங்க் உரிமையாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே போலீசார் தடைவிதித்திருந்தனர். ஆனால் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளை குறிவைத்து பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன.



latest tamil news




இதை தடுக்க, பாட்டிலில் பெட்ரோல் விற்கக்கூடாது என மீண்டும் போலீசார் பங்க் உரிமையாளர்களை எச்சரித்தனர்.இத்தடையை மீறி மதுரை காமராஜர் ரோட்டில் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க் ஒன்றில் வண்டியூர் குறிஞ்சி நகர் மகாலிங்கம் 52, என்பவருக்கு பாட்டிலில் பெட்ரோல் விற்கப்பட்டது. இதையறிந்த போலீசார் மகாலிங்கம், பங்க் மேலாளர் மணிகண்டன் 26, மீது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் விற்றதாக, வாங்கியதாக தெப்பக்குளம் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பங்க் உரிமம் பெறும்போது போலீசாரின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம். ஆபத்தை விளைவிக்கும் வகையில் விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில்தான் போலீசார் சான்று தருகின்றனர். தற்போது இந்த நிபந்தனையை மீறியதால் பங்க் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்திற்கு கமிஷனர் செந்தில்குமார், துணைகமிஷனர் சீனிவாச பெருமாள் பரிந்துரைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202213:03:11 IST Report Abuse
Lion Drsekar திருடாதே பாப்பா திருடாதே, வறுமை நிலைக்கு பயந்து விடாதே, சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு, தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது, திருடராய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஓழிக்க முடியாது, இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஹா.ஆஅ.ஆ.ஹா..ஆஅ.ஆஅ.. உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா கெடுக்குற நோக்கம் வளராது மனம் கீழும் மேலும் புரளாது," தவறானவர்கள் பேச்சை கேட்டு வாழ்வதை விட்டுவிட்டு , நாம் , நமது குடுத்தும், நம் நாடு , நம் மக்கள், நம்ம உலகம் என்று வாழ முன்வந்தால் மட்டுமே எல்லா வளமும் பெறமுடியும். மீண்டும் தத்துவப்பாடல்கள் எழுதிய சான்றோர்களுக்கு நமது வணக்கங்கள் . வந்தே மாதரம்
Rate this:
Cancel
Just imagine - chennai,சீனா
28-செப்-202210:37:25 IST Report Abuse
Just imagine அணில்களின் மைண்ட்வாய்ஸ் : "நல்ல வேளை டாஸ்மாக்கில் பாட்டில்கள் உபயோகிக்க ஆபிஸர் தடை விதிக்கல."
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X