பெண்களை 'பொருட்களாக' நடத்தும் பா.ஜ.,வினர்: ராகுல் குற்றச்சாட்டு

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (57) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் மிகப்பெரிய பலமான பெண்களை பா.ஜ.,வினர் ‛பொருட்களாக' நடத்துவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ., மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி உள்ளது. அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி, விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து
Rahul Gandhi, Congress,  Ankita Bhandari, ராகுல், அங்கிதா பண்டாரி, பெண்கள், பாஜக, பாஜ,  ராகுல் காந்தி, காங்கிரஸ், Rahul, Women, BJP,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவின் மிகப்பெரிய பலமான பெண்களை பா.ஜ.,வினர் ‛பொருட்களாக' நடத்துவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ., மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி உள்ளது. அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி, விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக கடந்த செப்.,24ம் தேதி மீட்கப்பட்டார். 19 வயதே ஆன அங்கிதா மரணம் குறித்து அவரின் தந்தை, புல்கிட் ஆர்யா மீது போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் புல்கிட் ஆர்யா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையான பா.ஜ.,வின் வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.latest tamil news


இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பெண்கள் நமது மிகப்பெரிய பலம். ஆனால், பா.ஜ.,வினரால் அவர்கள் 'பொருட்களாக' நடத்தப்படுகின்றனர். இதற்கு உத்தரகண்டில் நடந்த அங்கிதா கொலையே மிகவும் கேவலமான உதாரணம். பா.ஜ.,வின் முதல்வர் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைத்து ஆதாரங்களையும் அழிக்கும் பணியை செய்தார். பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பா.ஜ.,வை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அதில் ராகுல் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
28-செப்-202222:21:11 IST Report Abuse
sankaseshan பெண்கள் போகப்பொருள் சொல்லறது பட்டாயா புகழ் இளவரசர் பப்பு
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-செப்-202220:38:03 IST Report Abuse
வெகுளி பெண்களை எப்படி பார்க்கணும்ன்னு தாய்லாந்து பயணிக்கு தெரியும்...
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
28-செப்-202219:07:31 IST Report Abuse
a natanasabapathy Thalaivaraaka nirpatharkku paysnthu odivitta umakku arasiyal yetharkku pappu. Pesaamal Italy senru paatti veettu soththai anubavikkalaam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X