ரூ.1 கோடி இடம் ஆக்கிரமிப்பு: நால்வர் கைது: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ரூ.1 கோடி இடம் ஆக்கிரமிப்பு: நால்வர் கைதுஆவடி : ஆவடியை அடுத்துள்ள அயப்பாக்கம் கிராமத்தில், ௧ கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரித்து, அதில் வீடு மற்றும் கடைகள் கட்டி, வாடகைக்கு விட்ட நால்வரை, மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஆவடியை அடுத்துள்ள அயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் திமோத்தி. இவரது தாய் மரிய சொரூபராணிக்கு, இந்த பகுதியிலுள்ள
Crime, Murder, Police, Arrested,


ரூ.1 கோடி இடம் ஆக்கிரமிப்பு: நால்வர் கைது


ஆவடி : ஆவடியை அடுத்துள்ள அயப்பாக்கம் கிராமத்தில், ௧ கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரித்து, அதில் வீடு மற்றும் கடைகள் கட்டி, வாடகைக்கு விட்ட நால்வரை, மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஆவடியை அடுத்துள்ள அயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் திமோத்தி. இவரது தாய் மரிய சொரூபராணிக்கு, இந்த பகுதியிலுள்ள ராஜம்மாள் நகரில், 2,767 சதுர அடி இடம் உள்ளது.கடந்த 2020ம் ஆண்டு சொரூபராணி இறந்தார். இந்நிலையில், மேற்கண்ட இடத்தில் 2,180 சதுர அடி இடத்தை, அதே பகுதியைச் சேர்ந்த நால்வர், போலி ஆவணங்கள் வாயிலாக தங்கள் பெயருக்கு மாற்றி, அந்த இடத்தில் வீடு மற்றும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அவர், ஆவடி மாநகராட்சி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் அளித்தார்.போலீசார் விசாரணையில், இடத்தை அபகரித்து, தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று வீடு, கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பது உண்மை என தெரிந்தது. இது குறித்து வழக்கு பதிந்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், இதில் தொடர்புடைய முகுந்தன், 69, நந்தகுமார், 48, ரங்கநாதன், 46, தரணிராஜா, 40, ஆகிய நால்வரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
போதையில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி சடலத்தின் அருகில் படுத்து துாங்கிய கொடூரம்


ஈரோடு : பணத்தகராறில், மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி, சடலத்தின் அருகில் படுத்து துாங்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, சூரம்பட்டி, கஸ்துாரிபாய் வீதியைச் சேர்ந்த கணேசன் மகன் விக்னேஷ், 29; 'ஆக்டிங்' கார் டிரைவர். இவரின் தம்பி அருண்குமார், 25; கட்டட தொழிலாளி. தம்பியுடன் ஒரே வீட்டில் விக்னேஷ் வசித்தார்.நேற்று காலை இருவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, விக்னேஷ் இறந்து கிடந்தார். அருகில் அருண்குமார் உறங்கிக் கொண்டிருந்தார்.சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தந்தனர்.டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் விரைந்தனர்.வீட்டுக்குள் போலீசார் நுழைந்த பிறகே, சகோதரன் கொல்லப்பட்டது அருண்குமாருக்கு தெரிந்தது.விசாரணையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும், பணம் தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. இருவரும், கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.அப்போது அருண்குமார், விக்னேஷை தாக்கியுள்ளார். இதில், அவர் இறந்து விட, போதையால் அருண்குமார், சடலத்தின் அருகிலேயே துாங்கி விட்டார்.அருண்குமாரை கைது செய்து, சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
கணவரை கடப்பாரையால்'போட்டு தள்ளிய' மனைவி


அரக்கோணம் : அரக்கோணம் அருகே, கணவரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற மனைவியை, போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உரியூரைச் சேர்ந்தவர் சீராளன், 38; சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.latest tamil news


இவரது மனைவி ஷோபனா, 30; இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.சீராளன் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிட்டு, தினமும் போதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் மாறிமாறி அடித்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷோபனா, கடப்பாரையால் அடித்ததில், சம்பவ இடத்திலேயே சீராளன் இறந்தார்.அரக்கோணம் போலீசார் ஷோபானாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கத்தியோடு சுற்றியவாலிபர் கைது


புதுச்சேரி : மேட்டுப்பாளையம் பகுதியில் கத்தியோடு சுற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, பிப்டிக் தொழிற்பேட்டையில் நின்றிருந்த வாலிபர், போலீசாரை கண்டதும் ஓடினார். சந்தேகமடைந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர் கத்தியை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.விசாரணையில் மேட்டுப்பாளையம், சாணரப்பேட்டையை சேர்ந்த சசிக்குமார்,27; என்பதும், கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, சசிக்குமாரை கைது செய்தனர்.
சீரழித்தவரை சிக்க வைத்த பெண்


புதுடில்லி : புதுடில்லியில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த அரசியல்வாதியை, விமான பணிப்பெண் ஒருவர் வீட்டின் அறையில் பூட்டி வைத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்து கைது செய்ய வைத்தார். புதுடில்லியின் மெஹ்ரவ்லியில் வசிக்கும் ௩௦ வயது விமான பணிப்பெண், நேற்று முன்தினம் தன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.


அப்போது ஹர்ஜீத் யாதவ் என்ற அரசியல் பிரமுகர், குடிபோதையில் விமான பணிப்பெண் வீட்டுக்குள் நுழைந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.விமான பணிப்பெண் அவரை அறைக்குள் பூட்டி வைத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார், விமான பணிப்பெண்ணை மீட்டு, அறைக்குள் இருந்த ஹர்ஜீத் யாதவை கைது செய்தனர்.ஹர்ஜித் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில்அடைத்தனர்.
மேரி, துர்கா சிலைகள் சேதம்; பர்தா அணிந்த பெண்கள் கைது


ஹைதராபாத் : தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் மேரி மற்றும் துர்கா சிலைகளை சேதப்படுத்திய, பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.


தலைநகர் ஹைதராபாதில் உள்ள கைரதாபாத் என்ற இடத்தில், தேவாலய வாசலில் இருந்த கன்னி மேரி மற்றும் அதற்கு சற்று துாரத்தில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்கள் சேதப்படுத்தினர்.இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இரு பெண்களையும் கண்டுபிடித்து கைது செய்தனர். ஆனால், இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என தெரிவித்த போலீசார், சகோதரிகளான இருவரும் மனநிலை சரியில்லாதவர்கள் என்றனர். சேதப்படுத்தப்பட்ட சிலைகள் உடனடியாக சீரமைக்கப்பட்டன.
மகன் தள்ளி விட்டதால் மனமுடைந்து தாய் தற்கொலை


கொளத்துார் : கொளத்துார், கணேஷ் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 50. கணவர் இறந்த நிலையில், ஜெயலட்சுமி தன் மகன்கள் ராஜேஷ்வர், 30, விக்னேஸ்வர், 25, ஆகியோருடன் வசித்து வந்தார்.இளைய மகன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். மூத்த மகன் ராஜேஷ்வர் மது பழக்கத்திற்கு அடிமையாகி, எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார்.இந்த நிலையில், 23ம் தேதி இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜேஷ்வர், தாயுடன் தகராறில் ஈடுபட்டு கீழே தள்ளி விட்டு, வெளியே சென்று விட்டார்.


இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி, 44 துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். மறுநாள் காலை, வீட்டின் அருகே வசிக்கும், ஜெயலட்சுமியின் தந்தை செல்வம் மகளை பார்க்க சென்றார்.அப்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயலட்சுமியை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் நேற்று காலை 10:30 மணி அளவில் உயிரிழந்தார். இது குறித்து, ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
28-செப்-202210:12:00 IST Report Abuse
jayvee போலி ஆவணங்களுடன் பெயர் மாற்றம் பதிவு செய்த SRO ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை ?
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
28-செப்-202210:36:46 IST Report Abuse
சீனிஅவன் பழம் தின்னு கொட்டைய போட்டு ரிட்டயர் ஆகியிருப்பான். 20வருடம் கேஸ் ஓடும் போது எவ்வளவு வாடகை சம்பாதிச்சிருபானுங்க ? இந்த 4திருடன்களும் விடியல் அடியாட்கள் மாதிரி இருக்கானுங்க.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X