சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ரவுடி கைது

Added : செப் 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: சென்னை, தாம்பரம் , பூந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சச்சின். ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சச்சின், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோமமங்கலம் பகுதியில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோமமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். இதனை பார்த்த சச்சின், போலீசார்
Chennai, Rowdy, Shooting, சென்னை, ரவுடி,  துப்பாக்கிசூடு , போலீஸ், police,

சென்னை: சென்னை, தாம்பரம் , பூந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சச்சின். ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சச்சின், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோமமங்கலம் பகுதியில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோமமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். இதனை பார்த்த சச்சின், போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். வெடிகுண்டு வெடிக்காததால், அரிவாளால் வெட்டினார். அதில், பாஸ்கர் என்ற போலீசார் படுகாயமடைந்தார்.



இதனையடுத்து, சிவக்குமார், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சச்சினின் முழங்காலில் 2 முறை சட்டார். அதில், படுகாயமடைந்து சுருண்டு விழுந்த சச்சினை, கைது செய்து குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் பாஸ்கர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28-செப்-202220:33:48 IST Report Abuse
Ramesh Sargam சென்னையிலும் இந்த துப்பாக்கி 'கலாச்சாரம்' துவங்கிவிட்டதா...? போச்சு... இனி தமிழக மக்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். - "ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன".
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202214:34:28 IST Report Abuse
அசோக்ராஜ் பாருங்கய்யா ...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202212:49:43 IST Report Abuse
Lion Drsekar காவல்த்துறைக்கு பாராட்டுக்கள், அடிபட்ட காவலர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்வோமாக . அதே நேரத்தில் மாண்புமிகு ரௌடியை சுட்ட காவல் துறை அதிகாரிக்கு பணிநீக்கம், பணியிடை மாற்றம் எதுவும் இலலாமல் இருக்கவும் வேண்டுகிறோம் . காவலர்கள் உங்களின் நண்பன் என்று கூறுவதை நிரூபித்த அதிகாரிக்கு பாராட்டுக்கள். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X