பங்குச்சந்தை மோசடி வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின்

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: பங்குச்சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 வரை, பதவிவகித்தபோது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 'செபி' எனப்படும், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு
NSE, CoLocation Case, Delhi HC, Grants, Bail, Chitra Ramkrishna, Anand Subramanian, பங்குச்சந்தை, மோசடி வழக்கு, டில்லி, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன், ஜாமின்

புதுடில்லி: பங்குச்சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.



தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 வரை, பதவிவகித்தபோது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 'செபி' எனப்படும், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தனக்கு ஆலோசகராக நியமித்து பல்வேறு சலுகைகளை வழங்கியதாக சித்ரா மீது புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.



latest tamil news


இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.ஐ., கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமின் கோரி சி.பி.ஐ. ,சிறப்பு கோர்ட்டில் சித்ரா ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை கடந்த மே 12ம் தேதி விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சித்ரா ராமகிருஷ்ணன், டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி தாக்கல் செய்தார். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்கி டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202208:08:25 IST Report Abuse
அப்புசாமி உண்மைகள் புதைக்கப்படும் இல்லையேல் எரிக்கப்படும். சுபம். எதுக்கும் முன்னெச்சரிக்கையாக Z பிரிவு பாதுகாப்பு குடுக்கவும்.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
28-செப்-202222:24:10 IST Report Abuse
K.n. Dhasarathan அனைவருக்கும் பெப்பே காட்டிய இருவருக்கும் அதற்குள் ஜாமீனா ? நீதி துரையின் இந்த மென்மையான போக்கினால் குற்றங்கள் அதிகமாகும். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை, இமயமலை சாமியார் சொன்னார் என்று சரடு விட்டவர்களை,மிக மிக கடுமையாக நடத்த வேண்டும் .
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
28-செப்-202219:35:22 IST Report Abuse
Anantharaman Srinivasan தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அதை கண்டுபிடிக்கவே எனக்கு 8 வருடம் வேண்டும்.. இடையில் நாங்கள் முடிந்த அளவு விளையாடி விடுவோம். Only suffers Investors...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X