நடுவானில் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்புக்கு வந்த போர் விமானங்கள்

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சிங்கப்பூர்: அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக கூறியது, விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலியாக மிரட்டல் விடுத்த அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போர் விமானங்கள் பாதுகாப்புடன் உரிய நேரத்தில் பாதுகாப்பாக
fake, bomb threat, assault, cabin crew, Singapore, Airlines, flight, arrest,  Escort, Fighter Jets, Bomb, Threat, சிங்கப்பூர் விமானம், சிங்கப்பூர், விமானம், வெடிகுண்டு, மிரட்டல்,  கைது, அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிங்கப்பூர்: அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக கூறியது, விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.போலியாக மிரட்டல் விடுத்த அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போர் விமானங்கள் பாதுகாப்புடன் உரிய நேரத்தில் பாதுகாப்பாக சிங்கப்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 209 பயணிகளுடன் சிங்கப்பூர் வந்தது. நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.தொடர்ந்து ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்ட அந்த நபர், ஒருவரை தாக்கி உள்ளார். இதனையடுத்து அவரிடம் நடந்த சோதனையில் அவரிடம் எந்த வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து சிங்கப்பூர் போலீசுக்கு விமான நிலைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.latest tamil news


தொடர்ந்து, சிங்கப்பூர் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், பயணிகள் விமானத்தை பாதுகாப்புடன் அழைத்து வந்தன. அந்த விமானம் திட்டமிட்டபடி சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.அங்கு, தயாராக இருந்த போலீசாரிடம் மிரட்டல் விடுத்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது ஊழியர்கள மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்நபர் போதை பொருட்கள் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரின் தகவல்களை வெளியிட சிங்கப்பூர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-செப்-202221:20:58 IST Report Abuse
Natarajan Ramanathan கூடவே இரண்டு விமானங்கள் பறப்பதால் என்ன பாதுகாப்பு கிடைத்துவிடும்? அபத்தமாக இருக்கிறதே
Rate this:
raja - Bangalore,இந்தியா
28-செப்-202222:18:27 IST Report Abuse
rajaகட்டிடத்துல மோதவிடாம தடுக்கலாம்ல? தீவிரவாதிகளிடமிருந்து இன்னமும் கத்துக்கல்லன்ன எப்பிடி?...
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
28-செப்-202222:40:48 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தை சுடக்கூட ராணுவத்துக்கு அனுமதி உண்டு....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28-செப்-202220:15:58 IST Report Abuse
Ramesh Sargam கைது செய்யப்பட்ட நபரின் தகவல்களை வெளியிட சிங்கப்பூர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதுதான் தவறு. அந்த நபரைப்பற்றிய முழு 'ஜாதகமும்' போட்டோ உள்ளிட்ட எல்லாவற்றையும் வெளியிடவேண்டும். முதலில் அவன் எந்த 'மதத்தை' சேர்ந்தவன் என்று அறிவிக்கவேண்டும். அறிவிக்காவிட்டாலும், அவன் எந்த மதத்தை சார்ந்தவன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆம் அந்த 'மு' என்கிற எழுத்தில் ஆரம்பிக்கிற மதமாகத்தான் அவன் இருக்கவேண்டும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-செப்-202200:18:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நிச்சயம் உன் போன்ற முட்-டாள் ரகமாகத் தான் இருக்கும்....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-செப்-202219:45:49 IST Report Abuse
NicoleThomson இன்னமும் எதற்கு விசாரணை , ? சீனாவிற்கு ஏற்றுமதி பண்ணிடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X