17 ஆயிரம் புள்ளிகளில் ஆட்டம் காட்டும் நிஃப்டி 50!

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்தன. உலகளாவிய பொருளாதார நிலைமைகள் பலவீனமாக இருப்பது இந்தியப் பங்குச்சந்தைகளிலும் தொடர்ந்து எதிரொலிக்கிறது. இன்று (செப்., 28) வர்த்தக நேர துவக்கத்தில் வங்கித் துறை, ஆட்டோமொபைல், மெட்டல், எரிசக்தி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் சரிவைச் சந்தித்தன.காலை 9.15 நிலவரப்படி நிஃப்டி 182 புள்ளிகள் சரிந்து 16,825 நிலைக்கு
Nifty50, Nifty, Sensex, பங்குச்சந்தை, வர்த்தகம், Stockmarket, StockmarketCrash, S&P500, SGXNIFTY, Nikki, இந்தியா, பொருளாதாரம்

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்தன. உலகளாவிய பொருளாதார நிலைமைகள் பலவீனமாக இருப்பது இந்தியப் பங்குச்சந்தைகளிலும் தொடர்ந்து எதிரொலிக்கிறது. இன்று (செப்., 28) வர்த்தக நேர துவக்கத்தில் வங்கித் துறை, ஆட்டோமொபைல், மெட்டல், எரிசக்தி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் சரிவைச் சந்தித்தன.



காலை 9.15 நிலவரப்படி நிஃப்டி 182 புள்ளிகள் சரிந்து 16,825 நிலைக்கு சென்றது. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 56,500 நிலைக்கு சென்றது. பின்னர் 11.50 மணி நிலவரப்படி நிஃப்டியின் சைக்கலாஜிக்கல் அளவான 17 ஆயிரம் புள்ளிகளுக்கு வந்தது. விலைவாசி மற்றும் வட்டி விகித உயர்வு போன்றவற்றால் உலகப் பங்குச்சந்தைகள் அழுத்தத்தில் உள்ளன. அமெரிக்க பங்குச்சந்தை குறியீடான எஸ்&பி 500 நவம்பர் 2020க்கு பின்னர் மிகக் குறைந்த நிலைக்கு நேற்றுச் சரிந்தது. மேலும் ஆசியப் பங்குச்சந்தைகளான நிக்கேய், தென்கொரிய பங்குச்சந்தையான கோஸ்பி ஆகியவையும் 2 சதவீதம் சரிந்தன, சிங்கப்பூர் பங்குச்சந்தையான எஸ்.ஜி.எக்ஸ்., நிஃப்டியும் 1 சதவீதம் அளவு சரிந்தது.




டெக்னிக்கல் சொல்வது என்ன?



ஏஞ்சல் ஒன் புரோக்கிங் நிறுவன தலைமை டெக்னிக்கல் ஆய்வாளர் சமீத் கூறியதாவது: நேற்று (செப்., 27) பெஞ்ச்மார்க் குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸில் பதட்டம் காணப்பட்டது. இதனால் கீழே நழுவியது. இருப்பினும், காளைகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இறுதியில் மீண்டும் திருத்தம் நிகழ்ந்தது. இதன் விளைவாக 0.05% இழப்புடன், 17,007 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. டெக்னிக்கல் படி 17,000 - 16,800 ஆதரவு புள்ளிகள் மீண்டு வரக்கூடிய இடங்களாக உள்ளன. இந்த இடங்களில் காளைகள் பதிலடி தருகின்றன. அதாவது வாங்குவது நடக்கிறது. குறிப்பிட்ட நிலைகளிலிருந்து சரியும் வரை மேலும் திருத்தம் நடக்குமோ என கவலைப்பட வேண்டியதில்லை.



latest tamil news


இருப்பினும் சந்தைகளில் மிக அதிக விற்பனை நடப்பதால், ஷார்ட் பொசிஷன்களை குறைக்க பரிந்துரைக்கிறோம். இதற்கிடையில், இன்ட்ராடே தடைகள் 17,100 - 17,200 வரை காணப்படுகின்றன. 17200 புள்ளிகளுக்கு அப்பால் ஒரு நிலையான நகர்வு தான் ஷார்ட் கவரிங்கை தூண்டும். அதுவரை 16,800 - 17,200 ஆகிய இரு நிலைகளுக்கு இடையே ஊசலாட்டம் தொடரும். உலகளாவிய விவகாரங்களை வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கவனியுங்கள். அதிக விற்பனை நின்றால் உலகளாவிய சந்தை உணர்வுகளை உயர்த்தும். இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202208:52:52 IST Report Abuse
Ramaraj P கீழே போனாலும் லாபம் மேலே வந்தாலும் லாபம் தான். நன்றாகப் புரிந்து செயல்பாடுவருக்கு.
Rate this:
Cancel
29-செப்-202208:04:52 IST Report Abuse
அப்புசாமி இன்னும் ஒரு ஆயிரம் புள்ளி சரிந்தால் ஒரு 20 லட்சம் கோடியை மார்க்கெட்ல உட்டு, பொருளாதாரத்துக்கு முட்டு குடுப்பாங்க.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-செப்-202200:16:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொருளாதாரத்தை வளக்குறாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X