சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: 15 மாவட்டங்களில் மழை கொட்டலாம்

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னையில் கனமழைசென்னையில் தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், திநகர்,ஒயிட்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து
 கனமழை, வாய்ப்பு, rain, heavyrain, rmc

சென்னை : வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


சென்னையில் கனமழை


சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், திநகர்,ஒயிட்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், கோவர்த்தகிரி, பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இதனால், சாலைகளில் செல்வோர் கவனமுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.



எச்சரிக்கை


இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



நாளை(செப்.,29)


வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யலாம்.



latest tamil news



தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.



மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வே கத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-செப்-202204:58:26 IST Report Abuse
NicoleThomson மாண்புமிகு மன்னரின் மந்திரிசபையில் இருக்கும் துறைமுருகனார் , இவ்வளவு தண்ணீரையும் வீணடிப்பதற்கு எதற்கு ஒரு துறை என்று வேதனைப்பட்டு பதவி விலகினார் என்றொரு கனவு வந்தது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X