மாயாவதிக்கு பிரதமர் பதவி மீது ஆசை: கட்சி போடுது புது ‛பிளான்'

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
லக்னோ: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தினால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க தயார் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர்.
Mayawati, PrimeMinisterial Candidate, Opposition Alliance, மாயாவதி, பிரதமர் வேட்பாளர், எதிர்க்கட்சிகள், கூட்டணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தினால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க தயார் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.

லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். இது ஒருபுறம் இருக்க பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருவதாக செய்தி வெளியானது. இவ்வாறாக பிரதமர் பதவி ஆசையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் மாறி மாறி மற்ற கட்சிகளுடன் பேசி வருகின்றன.



latest tamil news


இந்நிலையில் உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தரம்வீர் சவுத்ரி கூறியதாவது: மாயாவதியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால், அவர்களுடன் கூட்டணி அமைக்க தயார். எதிர்க்கட்சிகள் மரியாதைக்குரிய வகையில் எங்கள் கட்சியை அணுகி, அவர்களின் செயல்திட்டங்களை எங்கள் தலைவரிடம் (மாயாவதி) தெரிவித்தால், கூட்டணி வைப்பது குறித்து அவர் இறுதி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்,அகிலேஷ் யாதவுடன் கூட்டணிக்கான சாத்தியம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‛அகிலேஷ் யாதவை விட மாயாவதி மிகப் பெரிய தலைவர். உத்தரபிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்துள்ளார். அகிலேஷ் ஒரு முறை மட்டுமே பதவி வகித்துள்ளார். மாயாவதி பெரிய மனப்பான்மை கொண்டவர், மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பவர். திறந்த மனதுடன் அகிலேஷ், மாயாவதியை தலைவராக ஏற்றுக்கொண்டால், அவரை நாங்கள் வரவேற்போம்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202215:28:51 IST Report Abuse
ராமகிருஷ்ணன் போட்டியாக மாயாவதியா, நல்லதல்ல.
Rate this:
Cancel
RAAJAA -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202204:02:37 IST Report Abuse
RAAJAA BJP யின் வெற்றிக்கு பாடுபடும் உங்க எல்லோருக்கும் நன்றி. BJP யின் B Team மாயாவதி.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-செப்-202203:18:57 IST Report Abuse
NicoleThomson பொதுமக்களின் வரிப்பணத்தை இந்த மாயாவதி கணக்கு வழக்கில்லாமல் செய்த செலவினால் தான் உத்திரபிரதேச மக்கள் இவரை தூக்கி ஓரம் போட்டுவிட்டார்கள் என்பது எனது எண்ணம் , தமிழகத்திலும் அப்படி நடக்கும் என்று நம்புவோமாக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X