டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
புதுடில்லி: இன்று(செப்.,28) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 40 காசுகள் சரிந்து 81.93 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது.உள்நாட்டு பங்குகளில் நிலவிய எதிர்மறையான போக்கு மற்றும் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும், டாலர் மதிப்பு
Rupee,US, dollar, இந்திய ரூபாய், டாலர், மதிப்பு, சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இன்று(செப்.,28) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 40 காசுகள் சரிந்து 81.93 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது.



உள்நாட்டு பங்குகளில் நிலவிய எதிர்மறையான போக்கு மற்றும் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும், டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியதுமே, ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


latest tamil news




அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும் சூழலிலும், அமெரிக்க பத்திரங்கள் உயர்ந்துள்ளதாலும், இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.



நேற்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து 81.53 ஆக நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
29-செப்-202210:08:20 IST Report Abuse
மண்டகசாயம் வெளிநாட்டிலிருந்து கருப்பு பணத்தை கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் , சிறுத்தை புலிகளை கொண்டு வந்தார்கள் 😄
Rate this:
Cancel
29-செப்-202208:01:58 IST Report Abuse
அப்புசாமி இங்கே டாலருக்கு எதிரான ரூவாயின் மதிப்பு குறைந்தது பற்றியதல்ல. நாங்க ஆட்சிக்கு வந்தால் 40 ரூவாய்க்கு ஒரு டாலர், ஆளுக்கு 15 லட்சம் போடற அளவுக்கு கருப்புபணம் இருக்கு, அதை நூறு நாளில் கொண்டாருவோம், வருஷம் ரெண்டு கோடி வேலை குடுப்போம், எல்லோருக்கும் வூடு. இப்பிடியெல்லாம் வாய்சவடால் அடிச்சு ஆட்சிக்கு வந்தவர்களின் இயலாமை. இன்னிக்கும் அந்த வாய்சவடால் குறையவில்லை. தங்கள் இயலாமைக்கு காந்தி, நேரு, உக்ரைன்னு காரணம் சொல்லிக்கிட்டிருந்தவங்க, இப்போ 2047 ல நாமதான் வல்லரசு, நூறு வருஷ பட்ஜெட்னு ஜல்லியடிச்சுக் கிட்டிருக்காங்க.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-செப்-202203:11:06 IST Report Abuse
NicoleThomson டாலர் நிலையாக இருக்கிறதென்று காட்ட இல்லுமினாட்டிகள் ஆடும் ஆட்டம் இது , இந்தியா ரசிய போன்ற நாடுகளுடன் இந்தியா ரூபாயில் வர்த்தகம் என்று எப்போது சொன்னார்களோ அப்போதே கணித்தேன் அமெரிக்க ஒரு மோசமான ஆட்டம் ஆடும் அப்போது எமது மக்கள் அதனை உணர்வார்களா என்று? , இன்னமும் வேறு சில நாடுகளுக்கு ரூபாயில் வர்த்தகம் என்று சொல்லி பாருங்க ஐநா சபைக்கே சீட் கொடுப்பாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X