நாடு முழுதும் வரும் அக்டோபர் மாதத்தில் முக்கியமான பண்டிகைகள், ஞாயிறு விடுமுறைகள் சேர்த்து , மொத்தம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபரில் ஆயுத பூஜை, தீபாவளி, மிலாது நபி, கர்வா சவுத் போன்ற பல பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது வழக்கமாக மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். மேலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த பணிகளை, அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நாட்கள் (இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும்). :
1.அக்., 1 (சனிக்கிழமை) : அரை வருட கணக்கு முடிவு - சிக்கிமில் வங்கிகள் செயல்படாது.
2.அக்., 2 (ஞாயிற்றுக்கிழமை) : காந்தி ஜெயந்தி (தேசிய விடுமுறை)
3.அக்., 3 (திங்கள்) : துர்கா பூஜை - திரிபுரா, ஒடிசா,சிக்கிம், மணிப்பூர், ஜார்க்கண்ட், மேகலாயா, கேரளாவில் வங்கிகள் செயல்படாது.
4.அக்., 4 (செவ்வாய்) : ஆயுத பூஜை - அகர்தலா, கர்நாடகா,ஒரிசா, சிக்கிம், கேரளா,மஹராஷ்டிரா, மே.வங்கம், உத்தரப்பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேகாலயா மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
5.அக்.,5 (புதன்) : விஜயதசமி,ஆயுத பூஜை - மணிப்பூர் தவிர அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் செயல்படாது.
6.அக்.,6 ( வியாழன்) : சிக்கிம், கேங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை
7.அக்.,7 (வெள்ளி ) சிக்கிம், கேங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை
8.அக்.,8 (சனிக்கிழமை) : மிலாது நபி (ம.பி., ஜம்மு, கேரளா,ஹிமாச்சல் மாநிலங்களில் விடுமுறை).
9.அக்.,13 (வியாழன்) : கர்வா சவுத் பண்டிகை ( சிம்லாவின் வங்கிகளுக்கு விடுமுறை.
10.அக்.,14 (வெள்ளி) : ஜம்மு, ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை.
![]()
|
11.அக்.,24 (திங்கள்) : தீபாவளி பண்டிகை (சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர் தவிர அனைத்து மாநிலங்களில் விடுமுறை).
12.அக்.,25 ( செவ்வாய்) : சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர், ராஜஸ்தானில் வங்கிகளுக்கு விடுமுறை.
13.அக்.,26 (புதன்) : கோவர்த்தன் பூஜை : குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர்காண்ட், சிக்கிம், ஜம்மு, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல், ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை.
14. அக்.,27 (வியாழன்) : சிக்கிம், மணிப்பூர், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் வங்கிகள் செயல்படாது.
15. அக்., 31 (திங்கள்) : குஜராத், பீஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement