மீண்டும் உயர்கிறது வட்டி விகிதம்: வீடு வாங்கும் கனவை பாதிக்குமா?

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ரிசர்வ் வங்கி தலைமையிலான வட்டி நிர்ணய குழு நாளை மேலும் ஒரு 0.5% வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடன்கள் மற்றும் வைப்புத் தொகைக்கான வட்டிகள் உயரும். இது வீடு வாங்குபவர்களை பாதிக்குமா என பார்ப்போம்.தொற்றுநோய்களின் போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 5.15 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்தது. அது பணப்புழக்கத்தை அதிகரித்தது.
IntrestRate, HomeLoan, வீட்டுக்கடன், வட்டிவிகிதம்

ரிசர்வ் வங்கி தலைமையிலான வட்டி நிர்ணய குழு நாளை மேலும் ஒரு 0.5% வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடன்கள் மற்றும் வைப்புத் தொகைக்கான வட்டிகள் உயரும். இது வீடு வாங்குபவர்களை பாதிக்குமா என பார்ப்போம்.தொற்றுநோய்களின் போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 5.15 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்தது. அது பணப்புழக்கத்தை அதிகரித்தது. வீடு வாங்கியவர்கள் குறைந்த வட்டியை அனுபவித்தனர். அந்த குறைந்த வட்டி விகிதங்கள் நிலையற்றவை, நீடிக்காது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்நிலையில் மே 2022 முதல், அதிகரித்து வரும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு கொள்கையை கையில் எடுத்துள்ளது. இதுவரை ரிசர்வ் வங்கி 1.4% அளவு வட்டியை உயர்த்தியுள்ளது. நாளை ஒரு 0.5% மற்றும் இது மேலும் அதிகரிக்கக் கூடும் என்கின்றனர். இதனடிப்படையில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தொழில் கடன் வட்டிகளும் உயரும்.latest tamil news


வருங்காலத்தில் வீடு வாங்க உள்ள நபர்களிடம் ஹவுசிங்.காம் மற்றும் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் ஆய்வு நடத்தியது. வீடு வாங்க உள்ள 50% வாடிக்கையாளர்கள் பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரிக்கும் என்பதால் விலைகள் உயரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். 2022ன் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வீட்டு விலைகள் ஆண்டுக்கு 7 சதவீதம் அதிகரித்துள்ளன. வீடு விலைகள் உயர்வதால், வட்டி விகித உயர்வு வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களின் சென்டிமென்ட்டை பாதிக்காது என்கின்றனர். மேலும் இந்த ஆண்டு நிலையான வட்டி விகித உத்தரவாதத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம். இது வீடு வாங்குபவர்களுக்கு பலனளிக்கும்.தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ராஜன் பந்தேல்கர் கூறியதாவது: வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு வேண்டும் என்ற நுகர்வோரின் ஆசை அதிகரித்து வருகிறது. நிதி பாதுகாப்பாக இதனை பார்க்கின்றனர். இது இத்துறைக்கு குறிப்பிடத்தக்க உந்துசக்தியாக உள்ளது. இந்த பண்டிகை காலத்தில் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு சாதகமாக அதிக சலுகைகளை கொண்டு வரும். மக்கள் பொருளாதாரம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதால், ரியல் எஸ்டேட் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்யும். அது வரவிருக்கும் ஆண்டிற்கு முன்னோடியாக விளங்கும். என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
28-செப்-202217:39:36 IST Report Abuse
Girija "தொற்றுநோய்களின் போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 5.15 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்தது". இதை யாரவது நம்புவார்களா? 10% வீட்டுக்கடன் வட்டி 9.5% ஆகா சிலருக்கு மட்டும் அதாவது அந்த அறிவிப்பை கவனித்து மனு அளித்தவர்களுக்கு மட்டும் மூண்டு மாதங்களுக்கு குறைத்தனர். 4 % மாம் இந்தியாவில் தான் இருக்கோமா ?
Rate this:
அருணாசலம், சென்னைஆமாம். ரிசர்வ் வங்கி 5.15% இருந்து 4% வரை 2020ல் குறைத்தது. அடுத்த அதிகரிப்பு 2021ல் தான் நடந்தது. குறைந்த வட்டியில் கடன் வேண்டும். ஆனால் நீங்கள் போடும் பணத்திற்கு அதிக வட்டி வேண்டும். நல்லா இருக்கு உங்க நியாயம்....
Rate this:
Girija - Chennai,இந்தியா
29-செப்-202207:21:34 IST Report Abuse
Girijaநான் வீடு வாங்கும் 2016 போது வட்டி விகிதம் 10% புளொட்டிங் வட்டி விகிதம், ஐந்து வருட பிளான். ஒரு போதும் வட்டி குரைந்தது என்று என் EMI குறையவில்லை. இந்த 4% வட்டி விகிதம் எதனை மாதங்கள் இருந்தது என்று சொல்ல முடியுமா?...
Rate this:
Cancel
28-செப்-202216:49:40 IST Report Abuse
அப்புசாமி 2023 க்குள்ளே எல்லோருக்கும் சொந்த வூடு குடுத்துருவோம் எதுக்கு அதிக வட்டிக்கு கடன் வாங்கி ஊடு கட்டுறீங்க
Rate this:
அருணாசலம், சென்னைஉன் பிழைப்புக்கு வரியில்லை. அப்புறமா எதுக்கு வீடு?...
Rate this:
28-செப்-202220:05:32 IST Report Abuse
naranamஓசியில் வேணுமோ?...
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
28-செப்-202216:11:05 IST Report Abuse
ponssasi குறிப்பாக ரியல் எஸ்டேட் குண்டர்களின் பிடியில் சிக்கியுள்ளது, குண்டர்கள் பிடியில் அனைத்து அரசியல் வாதிகளும் சிக்கியுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X