கருக்கலைப்புக்கு கணவன் அனுமதி தேவையில்லை: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
திருவனந்தபுரம்: கருக்கலைப்பு செய்வதற்கு பெண்கள், கணவனின் அனுமதியை பெற தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 21 வயது கர்ப்பிணி ஒருவர், மருத்துவ விதிகளின்படி கருக்கலைப்பு செய்ய அனுமதி கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பெண் சட்ட ரீதியாக விவாகரத்து விவாகரத்து பெறவில்லை. விதவையும் இல்லை.இதனை
Wife, husband, permission, abortion, Kerala HC, abortion rights, கர்ப்பிணி, கருக்கலைப்பு, கேரள உயர்நீதிமன்றம், கேரள ஐகோர்ட்,

திருவனந்தபுரம்: கருக்கலைப்பு செய்வதற்கு பெண்கள், கணவனின் அனுமதியை பெற தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 21 வயது கர்ப்பிணி ஒருவர், மருத்துவ விதிகளின்படி கருக்கலைப்பு செய்ய அனுமதி கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பெண் சட்ட ரீதியாக விவாகரத்து விவாகரத்து பெறவில்லை. விதவையும் இல்லை.

இதனை விசாரித்த நீதிபதி அருண் பிறப்பித்த உத்தரவு: கருக்கலைப்பு செய்ய விரும்பும் கர்ப்பிணிகள், அதற்கு கணவனின் அனுமதியை பெற தேவையில்லை. கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில், அதுபோன்ற விதிகள் ஏதும் கிடையாது. கர்ப்பம் மற்றும் குழந்தைபேறின் போது ஏற்படும் வலி மற்றும் மன அழுத்தத்தை பொறுத்து கொள்வதே இதற்கு காரணம் ஆகும்.


latest tamil newsவழக்கு தொடர்ந்த பெண் கணவருடன் உறவிலும் இல்லை. கணவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடன் சேர்ந்து வாழவும் விரும்பவில்லை. இதனால், அந்த பெண்ணின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுவதாக நீதிமன்றம் கருதுகிறது எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA - chennai,இந்தியா
29-செப்-202208:53:15 IST Report Abuse
SIVA இது கோர்ட் தான இல்ல மெண்டல் ஆஸ்பத்ரியா என்று ஒரு படத்தில் வசனம் வரும்
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
29-செப்-202207:56:34 IST Report Abuse
R Ravikumar கேரளா நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால் ஜட்ஜ் அய்யா, கரு உருவானால் அது ஆண்களின் பொறுப்பு இல்லை என்று சட்டம் கொண்டு வாங்களேன். ஆண்கள் தனியே சென்று விடுகிறோம், மனைவி விவாகரத்து வாங்கினாலும், கணவன்மார்கள் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டி வராது. உறவு கொண்டு விட்டு ஆண்கள் வெளியே சென்று விடுவார்கள். பெண்கள் தான் ஆணுக்கு சமம் ஆயிற்றே.. உழைத்து குழந்தையை வளர்த்து கொள்ளட்டும் . ஒருவேளை கரு உருவாவதகர்க்கு ஆணின் சம்மதம் உறவு தேவை இல்ல என்று எதிர்காலத்தில் வரலாம் , அப்படி வந்தால் பெண்களுக்கு இணையாக ஒரு உயிரை உற்பத்தி செய்து ஆண்கள் எங்கள் தேவைக்கு வைத்து கொள்கிறோம் (எதிர்காலத்தில் சாத்தியம்). இந்த செய்தியில் உள்ள கருத்தை நான் மதிக்கிறேன் அந்த பெண் பாதிக்கப்பட்டது உண்மை தான் . ஆனால் இப்போது என்ன ஆகும்? இதனை முன் உதரணமாக கொண்டு இனி எந்த பெண்ணும் இப்படி செய்வாள். ஆணும் அவர் குடும்பபும் அதனை கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை வரும். அதன் விளைவாக குழந்தை /வம்சத்தின் மீது பற்று இல்லாத ஆண்சமூகம் உருவாகும். அதன் விளைவாக திருமண சடங்கு அழியும். ( வெட்டி திராவிடத்தின் வெற்றி அது) உறவுக்கு மட்டும் சேர்ந்து வாழுதல் இருக்கும். பெண்ணின் demand ஆண்கள் மீது அதிகம் எடுத்து கொள்வார்கள். விரக்தி அடைந்த ஆண் சமூகம் பொருளாதாரம் சேர்ப்பதில் அக்கறை காட்டாது . அதன் விளைவாக ஆடம்பர பொழுது போக்கு வரும் , சேமிப்பு கலாச்சாரம் அழியும் . பலவீன சமூகம் உருவாகும். கருக்கலைப்புக்கு அனுமதிக்கலாம் என்று அவசர தீர்ப்பு கொடுத்தால் வேலை முடிந்திருக்கும் . கணவன் மோசமானவன் என்ற காரணத்தினாலே .. இப்போ எல்லா ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தை நீதிமன்றம் உள்வாங்கி கொள்ளவில்லை . வாழ்த்துக்கள் இந்தியா / கேரள நீதி மன்றத்திற்கு.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
29-செப்-202207:14:55 IST Report Abuse
Girija மனசாட்சி உள்ள எந்த ஒரு ஆண் மகனும் இந்த விஷயத்தில் கேவலமாக கள்ளதொடர்பு, தெலுங்கனின் கருத்தை போன்றவற்றை சம்பந்தப்படுத்தி இங்கு இழிவு பதிவுகளை செய்ய மாட்டார்கள். ஒரு நல்ல பெண், பெற்றோர் நடத்திவைத்த திருமணம் மூலம் வாழ்க்கையை துவங்குகிறாள். அங்கு கணவனே சரியில்லை, வரதட்சணை கொடுமை, அங்கு உள்ள ஆண்களால் பாலியில் துன்புறுத்தல் என்று இருக்கும்போது கருவுற்றால் படித்த பெண், புத்திசாலி பெண் என்ன செய்வாள்? பொறுப்பில்லாத அந்த குடும்பத்தில்தான் சிக்கியது போதாதென்று தன் குழந்தையையும் சிக்கவைத்து நரகத்தில் வாழ்வாளா? அதுவும் பெண் பிள்ளையாக பிறந்துவிட்டால் அவள் கதி அதோகதிதான். இப்படி ஒரு நிலைமை உங்கள் வீடு பெண்ணிற்கு ஏற்பட்டால் தகப்பனாக சகோதரனாக என்ன செய்வீர்கள்? பஞ்சாயத்து பேசிபார்ப்பீர்கள், சிலகாலம் பொருத்துபார்ப்பீர்கள், உங்களால் முடிந்ததையெல்லாம் செய்வீர்கள் ஆனால் இந்த காலகட்டத்தில் அவள் ஒன்று இரண்டு என்று குழந்தைகளுக்கு தாயானால், அவளை யார் வைத்து காப்பாற்ற முடியும்? அவள் தனியாக இருந்தால் மட்டும் உடன் பிறப்புகள் ஓரளவு காப்பாற்றமுடியும். அவளுக்கு எதாவது ஓர் வேலை வாங்கி கொடுத்து பாதுகாப்பாக வைக்க முடியும். கணவன் மற்றும் அவன் குடும்பம் சரியில்லையா, பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடவேண்டும், காதல் திருமணம் என்றால் கண்டிப்பாக முதல் ஒருவருடத்திற்கு குழந்தை பெறுவதை கண்டிப்பாக தள்ளி போடவேண்டும். இந்த பிள்ளை வரம் தரும் ஆசாமிகள் இதையே வைத்து நமக்கு ஒரு அடிமை சிக்கிடுச்சு என்று இன்னும் அராஜகம் செய்வர். இந்த கருத்தை படித்தவுடன் சில ஜோல்னா பைகள் அது அந்த காலம் என்று வாய் ஜாலம் காட்டும் ஆனால் அதே ஜோல்னா பைகள் அந்த வீட்டில் மாமனாராக மச்சினர்களாக இருப்பர், வீட்டில் வெட்டியாக இருப்பர், மனைவி சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கருத்து கந்தசாமியாக ஊர் சுற்றுவர். சிலர் ஆண் இல்லாமல் பெண் கரு முடியாது என்று அதையே திருப்பி உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள் பெண் இல்லாமல் முடியுமா? முடியவே முடியாது. பெண் என்பவள் பூமி போன்றவள் அவள் தான் விதைக்கப்பட்ட விதையை நல்ல முறையில் விளைவிக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X