''ஆந்திரா அரசு மீது ஏற்கனவே வழக்கு போட்டாச்சு '': அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
வேலுார்: ஆந்திரா அரசு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டாமலிருக்க அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று(செப்.,28) நடந்தது. இந்நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலுார்: ஆந்திரா அரசு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டாமலிருக்க அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
latest tamil newsவேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று(செப்.,28) நடந்தது. இந்நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.latest tamil newsபின் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திரா மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டாமலிருக்க தமிழக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதனால் அணை கட்ட முடியாது. அப்படி அணை கட்ட முயற்ச்சித்தால் வழக்கை துரிதப்படுத்துவோம்.latest tamil news
அதிமுக ஆட்சியில் மதகுகள் பராமரிப்பு இல்லை:


அ.தி.மு.க., ஆட்சியில் அணைகள், மதகுகள் பராமரிக்கப்படவில்லை. இதனால் கிருஷ்ணகிரி அணையில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது. பரம்பிக்குளத்திலும் மதகுகளின் கதவுகள் உடைந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. தற்போது பழுதடைந்த மதகுகள், கதவுகள் சீரமைக்க அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.latest tamil newsதி.மு.க., பயங்கரவாதத்திற்கு துணை போவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகிறார். அவர் விவரம் தெரியாத அமைச்சர். எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு தி.மு.க., துணை போனதில்லை.latest tamil newsபாப்புலர் பிரண்ட் ஆப் தடை குறித்து கேட்டதற்கு, தடை வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓ. பன்னீர்செல்வம் பேசி வருவது குறித்து கேட்டதற்கு, பாவம் அவர் கலங்கிப்போய் பெனாத்துகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-செப்-202222:50:26 IST Report Abuse
Bhaskaran தர்மபுரிகாரர் துரைதாத்தாவை கோபத்தில் ஏதேனும் செய்துடப்போறார் பாதுகாப்புக்கொடுங்க
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
28-செப்-202222:37:01 IST Report Abuse
Siva கேஸ் போட்டு... வழக்கமா நம்ம திராவிட மாடல் கடிதம் எழுதுதல் மரபு. நீங்களும் ஒரு மந்திரி. டாஸ்மாக் தமிழன் நாசமாக போகட்டும்.நீங்க கொஞ்சமாவது நல்ல சரக்கு கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28-செப்-202220:49:50 IST Report Abuse
sankaranarayanan அய்யய்யோ ஐயரைக்கூப்பிட்டு இந்த அமைச்சர் பூஜை போட்டுவிட்டாரே. தருமபுரி எம்.பி. அவர்கள் இவரை சஸ்பெண்டு செய்துவிடுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X