புதுடில்லி: இம்மாதம் 6-ம் தேதி நான்கு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா -வங்கதேசம் இடையே பாயும் குஷியாரா நதியிலிருந்து நீரை பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் குஷியாரா நதிநீர் பகிர்வு தொடர்பாக இரு நாடுகளிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வாபஸ் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.