திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், பொன்மார் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில், பொறியியல் கல்லுாரிகள், பிரபல தனியார் பள்ளிகள், புதிய மனை பிரிவு, அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வளர்ச்சியடைந்து வருகின்றன.இந்த ஊராட்சியின் பேருந்து நிலையம் மற்றும் நிறுத்தம், மாம்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ளன.பயணியர் அதிகம் வரும் நிலையில், இங்கு பொது கழிப்பறை வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் 10.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய பொது கழிப்பறை கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.ஊராட்சி தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய சேர்மன் பங்கேற்று, புதிய கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.