ஆம்பூர்:பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் ஆம்பூரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் இந்த அமைப்பில் ஏராளமானவர்கள் சேர்ந்துள்ளனர்.இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கத்தில் ஆம்பூர், வாணியம்பாடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தயாரித்துள்ள நிர்வாகிகள் பட்டியலைக் கொண்டு இப்பகுதியில் அவர்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.