வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :புதுடில்லியில் மது விற்பனை உரிமம் வழங்கியதில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் மதுபான விற்பனை நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர் சமீர் மகேந்துருவை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2021 - 2022ல் மதுபான விற்பனை உரிமம் தொடர்பாக புதிய கொள்கையை ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. இதன்படி தனியார் நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்படும்.
இந்தக் கொள்கையால் உரிமம் வழங்குவதில் பல மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார்.
![]()
|
இதையடுத்து இந்தக் கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கில் கலால் துறையையும் கவனிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக மதுபான விற்பனை செய்யும் தொழிலதிபர் விஜய் நாயரை சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு மதுபான தொழிலதிபர் சமீர் மகேந்துருவிடம், அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி விசாரணக்குப் பின் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.