'எலக்ட்ரானிக்ஸ் இந்தியா மார்ட்'பங்கு விலை அறிவிப்பு

Added : செப் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி:'எலக்ட்ரானிக்ஸ் இந்தியா மார்ட்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு, அக்டோபர் 4ம் தேதி வருகிறது. இதையடுத்து, இந்நிறுவன பங்கு விலை 56 - 59 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.நுகர்பொருள் சில்லரை விற்பனை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா மார்ட் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, அக்டோபர் 4ம் தேதி துவங்கி, 7ம் தேதியுடன்
எலக்ட்ரானிக்ஸ் இந்தியா மார்ட்

புதுடில்லி:'எலக்ட்ரானிக்ஸ் இந்தியா மார்ட்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு, அக்டோபர் 4ம் தேதி வருகிறது. இதையடுத்து, இந்நிறுவன பங்கு விலை 56 - 59 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நுகர்பொருள் சில்லரை விற்பனை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா மார்ட் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, அக்டோபர் 4ம் தேதி துவங்கி, 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. பங்கு வெளியீட்டின் போது, 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.



நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்குகள் எதுவும் விற்கப்படவில்லை.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, அதன் மூலதன செலவுகளுக்காகவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், கடன்களை திருப்பி செலுத்துவதற்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இந்நிறுவனம், 'பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்நிறுவனத்துக்கு 36 நகரங்களில், 112 ஸ்டோர்கள் உள்ளன. தற்போது இந்நிறுவனம், இந்தியாவின் தெற்கு பகுதியில் வலுவாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
29-செப்-202207:44:23 IST Report Abuse
Muraleedharan.M GMP எவ்வளவு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X