திருவனந்தபுரம்: தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக முதல் டி-20 கிரிக்கெட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் பங்கேற்கிறது. இன்றைய முதல் டி.20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் துவங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில். 8 விக்கெட்டுகளை இழந்து.. 106 ரன்கள் எடுத்தது.
![]()
|
இதன் மூலம் இந்திய அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா நிர்ணயித்தது.
இதையடுத்து 107 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும், சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் எடுத்தனர்.