பட்ஜெட் விலையில் நோக்கியா டி10 டேப்லெட்!

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | |
Advertisement
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா நிறுவனம் அவ்வபோது ஓரிரு புது அறிமுக ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தாலும், மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மத்தியில், பெரிய அளவில் வெற்றிய அடையமுடியவில்லை. சமீபத்தில் புதிய டி20 என்ற டேப்லெட்டை அறிமுகம்
Dinamalar, Technology, Nokia T0 Tablet, தினமலர், டெக்னாலஜி, நோக்கிய டி10 டேப்லெட்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா நிறுவனம் அவ்வபோது ஓரிரு புது அறிமுக ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தாலும், மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மத்தியில், பெரிய அளவில் வெற்றிய அடையமுடியவில்லை. சமீபத்தில் புதிய டி20 என்ற டேப்லெட்டை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில், நோக்கியா T10 டேப்லெட் என்ற மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.latest tamil newsஇந்த டேப்லெட் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தற்போது வரை ஓசன் புளூ என்ற ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.

8 இன்ச் 1280x800 பிக்சல் கொண்ட ஹெச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 5250 எம்ஏஎச் கொண்ட பெரிய பேட்டரியுடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது..latest tamil newsஇதுபோக, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. மாலி G57 MP1 GPU சிப்செட் உடன் வருகிறது.latest tamil newsஇதன் கேமராவை பொறுத்தவரை, 8 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில், பாதுகாப்பு அம்சமாக பிங்கர் பிரிண்ட் கைரேகை ஸ்கேனர் இல்லை, அதற்கு பதிலாக ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. தூசி மற்றும் தண்ணீர் பூகாத IPX2 தரச்சான்று பெற்றுள்ளது.latest tamil newsஇந்த நோக்கியா டி10 டேப்லெட்டின் விலையை பொறுத்தவரை, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ. 11, 799 ஆகவும், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ. 12, 799 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X