திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 8 வயது சிறுமியின் தாய், 2018 ஆக.,10ம் தேதி, மகளை பக்கத்து வீட்டுக்காரரான பலராம் சிங், 69, என்பவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.
இதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடைபெற்றது.விசாரணையின் போது, அதே பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு சிறுமியரை இவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்தது.
இந்த வழக்கின் விசாரணை, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா தேவி, குற்றம் நிரூபணமானதால், பலராம் சிங்குக்கு, 16 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 4,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, பலராம் சிங் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.