திருச்செந்துார் கோவிலில் ரூ.300 கோடியில் திருப்பணி

Added : செப் 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை:திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், 300 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைத்தார்.திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணி மற்றும் இதர பணிகள், பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி நடத்த, அரசு முடிவு செய்தது.உபயதாரர், 'வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட்'
திருச்செந்துார் கோவிலில் ரூ.300 கோடியில் திருப்பணி

சென்னை:திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், 300 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைத்தார்.

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணி மற்றும் இதர பணிகள், பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி நடத்த, அரசு முடிவு செய்தது.உபயதாரர், 'வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட்' நிறுவனம் வழியாக, 200 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளன.


காத்திருப்பு, ஓய்வு, பொருட்கள் பாதுகாப்பு, பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறைகள், நடைபாதை, மருத்துவ மையம், தீத்தடுப்பு கண்காணிப்பு, அன்னதானக் கூடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.கோவில் நிதியில் இருந்து, 100 கோடி ரூபாய் மதிப்பில், பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், பஸ் நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டடம், பணியாளர் குடியிருப்பு, கடல் அரிப்பை தடுக்க சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இப்பணிகளை, தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
29-செப்-202211:46:16 IST Report Abuse
ram இது HCL ஆல் ஸ்பான்சர் செய்யப்படுகிறது ஆனால் இந்த அரசாங்கம் ஸ்டிக்கர் ஒட்டுது, என்னமோ அரசெ செய்வது போல
Rate this:
Cancel
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
29-செப்-202210:52:22 IST Report Abuse
P.Sekaran வினாயகர் சதுர்த்திக்கு மக்களுக்கு செய்தி சொல்லாதவர் அண்ணன் முருகனுக்கு ஆன் லைனில் பட்டனை அமுக்குவது எந்த விதத்தில் ஞாயம். ராசா பேசிய பேச்சால் இந்துக்கள் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற காரணத்தினால் ஐஸ் வைக்கிறார்
Rate this:
Cancel
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
29-செப்-202210:22:03 IST Report Abuse
Mahalingam Laxman மு. ம ( முதல் மந்திரி) இரட்டை வேஷம் வெளியாகி விட்டது. விளம்பரத்திற்காக திட்டங்கள் அறிவித்து பட்டனை அமுக்கி பேப்பரில் போட்டோ வந்தாச்சு அதுவும் கோயில் பணத்தில் கட்ட இருப்பதில் இவருக்கு என்ன வேலை. .எல்லாம் சேகர் பாபுவின் வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X