சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

உழைப்பில் வரும்பணத்திற்கு மதிப்புண்டு!

Added : செப் 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபடியே, உழவர் சந்தையில் காய்கறி விற்கும் கவுதமி: கரூர் - பழநி சாலையில் உள்ள கோட்டைபட்டி, என் சொந்த ஊர். அப்பா இறந்து விட்டார். தம்பியும், தங்கையும் படித்துக் கொண்டுஇருக்கின்றனர். அப்பா விட்டுட்டு போன, 4 ஏக்கர் தோட்டத்தை, அம்மா தான் பராமரிச்சு, என்னை எம்.சி.ஏ., படிக்க வச்சாங்க.கல்லுாரியில் படிக்கும் போதே, களை பறிப்பது, பாத்தி கட்டுவது, தண்ணீர்
சொல்கிறார்கள்

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபடியே, உழவர் சந்தையில் காய்கறி விற்கும் கவுதமி:

கரூர் - பழநி சாலையில் உள்ள கோட்டைபட்டி, என் சொந்த ஊர். அப்பா இறந்து விட்டார். தம்பியும், தங்கையும் படித்துக் கொண்டுஇருக்கின்றனர். அப்பா விட்டுட்டு போன, 4 ஏக்கர் தோட்டத்தை, அம்மா தான் பராமரிச்சு, என்னை எம்.சி.ஏ., படிக்க வச்சாங்க.கல்லுாரியில் படிக்கும் போதே, களை பறிப்பது, பாத்தி கட்டுவது, தண்ணீர் பாய்ச்சுவது, மருந்து தெளிப்பது என, எல்லா தோட்ட வேலைகளையும் செய்வேன்.



எங்கள் நிலத்தில், தினமும் வீட்டு செலவுக்கு உதவுகிற மாதிரி, ஏதாவது விளைவிக்கலாம் என்ற யோசனை வந்தது. அதன்பின், கீரையும், காய்கறிகளும் பயிரிட்டேன். நான் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வருவதற்குள், தங்கையும், தம்பியும் கீரையை பறிச்சு வெச்சுடுவாங்க. நான் அதை, 10 ரூபாய் கட்டுகளாக பிரித்து கட்டி வைப்பேன்.தினமும் அதிகாலையில் 4:00 மணிக்கு எழுந்து, மொபைல்போன் வெளிச்சத்தில் காய்கறிகளை பறிச்சு, மூட்டையாக கட்டுவேன். ௫:௩௦ மணிக்கெல்லாம் குளித்து ரெடியாகி, காய்கறி மூட்டையையும், ஒரு பையில் லேப்டாப்பையும், இன்னொரு பையில் சாப்பாட்டையும் எடுத்துக்கிட்டு, உழவர் சந்தைக்கு கிளம்பிடுவேன். அங்கே சரியாக 6:00 மணிக்கு வியாபாரத்தை ஆரம்பிச்சிடுவேன். காய்கறிகள் வாங்க வர்றவங்க, 'ஏம்மா கடைக்காரர் எங்க போயிட்டாரு?'ன்னு கேட்பாங்க. 'நான் தான் கடைக்காரர்'ன்னு சொன்னதும், 'கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்க வேண்டிய நீ, இப்படி காய்கறி விற்கிறியேம்மா' என்று கேட்பாங்க.



எல்லா தொழிலுக்கும் முன்னோடியே விவசாயம் தான். ஜனாதிபதி வந்தால், நாம் எழுந்து நிற்போம். ஆனால், முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம், ஒரு விவசாயியை பார்த்து எழுந்து நின்றார். விவசாயிகளுக்கு, இந்த சமூகத்தில் என்றைக்குமே மதிப்பு இருக்கும்.எங்க தோட்டத்து காய்கறிகளை விற்பதில், எனக்கு என்ன கவுரவ குறைச்சல். தினமும் காலையில், மூணு மணி நேரத்தில், 300 ரூபாய்க்கு குறையாமல் காய்கறிகளை விற்று, அப்படியே ஆபீசுக்கு கிளம்பிடுவேன். அங்க போயி தான், காலை உணவு சாப்பிட்டு, நிம்மதியா வேலை செய்வேன்.உழவர் சந்தையில் விற்பனை செய்து, கையில் வாங்குகிற, ஒவ்வொரு ரூபாய் நாணயமும், எனக்கு தங்கக்காசு மாதிரி தான் தெரியுது. நேர்மையான வழியில் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்துக்கு, எப்பவுமே மதிப்பு உண்டு. இப்படித்தான் நாம வாழணும்ன்னு ஆசைப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naga Raj - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-செப்-202218:00:25 IST Report Abuse
Naga Raj காங்கிரதுலேஷன்ஸ் சிஸ்டர். கோட் ப்ளேசஸ் யு.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
29-செப்-202217:19:54 IST Report Abuse
கல்யாணராமன் சு. வெட்டியா சுத்திக்கிட்டு, பைசா பொறாத படங்களை பாத்துகிட்டு வீணா போயிக்கிட்டிருக்கிற விடலைங்க இந்த பொண்ணை பாத்தாவது திருந்துவார்களா ??
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
29-செப்-202216:11:13 IST Report Abuse
Vijay D Ratnam வாழ்த்துக்கள் கவுதமி அவர்களே. தொடரட்டும் உங்கள் பணி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X