பி.எப்.ஐ., தடைக்கு முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு!

Updated : செப் 30, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (12+ 1) | |
Advertisement
புதுடில்லி:சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய, பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற இஸ்லாமிய அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு, பல முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிப்பதாக அவை அறிவித்துள்ளன.தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இயங்கி வந்த சில முஸ்லிம்கள் அமைப்புகள் இணைந்து, 2006ல்
பிஎப்ஐ, தடை, முஸ்லிம் அமைப்புகள், வரவேற்பு, pfi, ban, muslim organisations,

புதுடில்லி:சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய, பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற இஸ்லாமிய அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு, பல முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிப்பதாக அவை அறிவித்துள்ளன.தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இயங்கி வந்த சில முஸ்லிம்கள் அமைப்புகள் இணைந்து, 2006ல் உருவாக்கியது தான் பி.எப்.ஐ., அமைப்பு. இது, கேரளாவில் உருவானபோதும், புதுடில்லியை தலைமையிடமாக வைத்து நாடு முழுதும் இயங்கி வந்தது.
பயங்கரவாத செயல்கள்

முஸ்லிம்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதற்காக இது உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது; ஆனால், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதை மத்திய அரசு கண்டறிந்தது. நாட்டின் இறையாண்மை, சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களை மத ரீதியாக துாண்டிவிடும் வகையிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வந்ததாக, பல புகார்கள் எழுந்தன. பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி செய்து வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து, பி.எப்.ஐ., மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில், கடந்த 22ம் தேதி என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனையில் ஈடுபட்டது. நாடு முழுதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையின்போது, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம், இந்த அமைப்புகளின் அலுவலகங்களில், மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில், 170க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஐந்தாண்டு தடை


இதைத் தொடர்ந்து, பி.எப்.ஐ., மற்றும் அது சார்ந்த அமைப்புகளுக்கு ஐந்தாண்டு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று முன்தினம் இரவில் அறிவிப்பை வெளியிட்டது. சன்னி வகாபி பிரிவைச் சேர்ந்த இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், பிரபலமான முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுடன், கடந்த 17ம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்திஉள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஐ.பி., எனப்படும் புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரிகள், முஸ்லிம் தலைவர்களுடன் பேசினார். தியோபந்தி, பரேல்வி மற்றும் சூபி பிரிவு தலைவர்களுடன் இந்த பேச்சு நடத்தப்பட்டது.சர்வதேச அளவில் இஸ்லாமிய அரசுகள் அமைக்கும் நோக்கத்துடனும், நம் நாட்டில் மத ரீதியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்தையும் இணைக்கும் 'வாகாபி சலாபி' என்ற கொள்கையுடன் பி.எப்.ஐ., அமைப்பு செயல்பட்டு வருவதாக, முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், பி.எப்.ஐ., அமைப்பின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சூபி, பரேல்வி, தியோபந்தி பிரிவு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்பதாகவும், அந்தத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.இதையடுத்து தான், பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 'மத்திய அரசு, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். மத்திய அரசின் இந்த முடிவை அனைவரும் வரவேற்க வேண்டும்' என, அனைத்திந்திய சூபி சஜ்ஜாதனாஷின் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.latest tamil newsராஜஸ்தானின் ஆஜ்மீரில் உள்ள தர்கா தலைவர் ஜைனுல் அபேதின் அதி கானும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:இந்த நாடு பாதுகாப்பாக இருந்தால்தான், அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும். எந்த ஒரு அமைப்பு மற்றும் சித்தாந்தத்தை விடவும், இந்த நாடு தான் மிக முக்கியம். இந்த நாட்டை பிளவுபடுத்தும் வகையிலும், இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்படுவோர், இங்கு வசிக்க உரிமை இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.'பயங்கரவாதத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட சரியான முடிவு' என, அனைந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா சகாபுதீன் ராஸ்வி பரேவ்லி கூறியுள்ளார். பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு, இப்படி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சில அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பிரிவுகளின் நோக்கம்!

அனைத்து மதங்களை போலவே, முஸ்லிம்களிடையேயும் பல்வேறு சிந்தனை பிரிவுகள் உள்ளன. இவற்றை துவக்கி போதித்த மவுலானாக்களின் பெயரில், அப்பிரிவுகள் அழைக்கப்படுகின்றன. அதன்படி, நம் நாட்டிலும் சில முஸ்லிம் பிரிவுகள் உள்ளன.


தியோபந்தி: உலக அளவில் முஸ்லிம்கள் இடையே பரவலாக பின்பற்றப்படுவது ஷாபி, மாலிக்கீ, ஹம்பிலி மற்றும் ஹனபி ஆகியவை, முக்கிய நான்கு சிந்தனை பிரிவுகள்.இதில் ஹனபியில் மட்டும் பரேல்வி, தியோபந்தி என இரண்டு கிளை சிந்தனைப் பிரிவுகள் இந்தியாவில் உருவாயின. இந்த இரண்டுமே, உத்தர பிரதேசத்தில் உள்ள மதரஸாக்கள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள்.உத்தர பிரதேசத்தின் தியோபந்தில் உள்ள தாரூல் உலுாம் மதரஸா, 152 வருடங்கள் பழமையானது. இங்கு இஸ்லாமிய பழமைவாதம் போதிக்கப்படுகிறது.பரேல்வி: இந்த பழமைவாத போதனையை ஏற்க மறுத்த அகமது ரசா என்பவர், சில மாறுதல்களுடன் தியோபந்துக்கு அருகிலுள்ள பரேலியில், பரேல்வி என்ற பெயரில், 1904ம் ஆண்டில் புதிய இயக்கத்தை உருவாக்கினார்.இந்த இரண்டிலுமே சன்னி ஹனபி வகைப் பாடங்கள் போதிக்கப்பட்டாலும், பரேல்வியின் முற்போக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப மறைநூலான குர்ஆன் புரிதலில் மாற்றம் உள்ளது. இஸ்லாமியப் பழக்க, வழக்கங்களிலும் தியோபந்திகளை போல் அன்றி சில மாற்றங்களை கடைப்பிடிக்கின்றனர்.சூபியிசம்: சூபியிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு. அன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது, இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள், சூபிகள் என அழைக்கப்பட்டனர்.தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சன்னி மற்றும் ஷியா முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு, இவர்களின் பிரதான வழிபாட்டு முறை.சலாபிசம் : எகிப்தில் உருவாகி, சவுதி அரேபியாவுக்குள் நுழைந்தது இந்த கோட்பாடு. முஸ்லிம் மதத்தை பிரசாரங்கள் வாயிலாக பிரபலப்படுத்துவது, விரிவாக்குவதுதான் இதன் முக்கிய அம்சமாகும்.வகாபிசம் : சவுதி அரேபியாவில் இருந்த வகாபிசம் என்பது, வன்முறையின் வாயிலாக மதத்தை விரிவுபடுத்துவதாகும்.ஆனால், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இந்த இரண்டையும் கலந்து செயல்படுத்தி வருகின்றன. பி.எப்.ஐ., அமைப்பும், இந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.ஐந்து ஆண்டுக்கு தடை!

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்தது, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்ற காரணங்களால், பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது, மிகவும் கடுமையான, 'உபா' எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.பி.எப்.ஐ., தவிர, 'ரீஹாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பல் பிரன்ட் ஆப் இந்தியா' உள்ளிட்ட அதன் துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பி.எப்.ஐ., நிர்வாகிகள் பலரும், ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட 'சிமி' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் இருந்துள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட ஜே.எம்.பி., எனப்படும் வங்கதேச ஜமாதுல் முஜாகிதீன் அமைப்புடனும் தொடர்பில் இருந்துள்ளனர்.இதைத் தவிர, ஐ.எஸ்., உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனும், இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது.பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என்று மத ரீதியில், மூளைச் சலவை செய்து வந்துள்ளனர்.மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு, நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர்.பயங்கரவாதத்துடன் கூடிய மத ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக நாட்டுக்கு எதிரான உணர்வை, ஒரு குறிப்பிட்ட மதத்தினரிடையே ஏற்படுத்தும் நோக்கத்துடனும்; மக்களிடையே மத ரீதியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும்; நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது.சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் இடையே நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


பி.எப்.ஐ., நிர்வாகிகளே, துணை அமைப்புகளையும் நிர்வகித்து வருகின்றனர்.சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அதே நேரத்தில் நாட்டுக்கு எதிராகவும், அரசியல் சாசன அமைப்புகளை அவமதிக்கும், சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடும் செயல்பட்டு வந்துள்ளன.இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.


நம் நாட்டுக்கு எதிராக செயல்படுவதற்காக, இந்த அமைப்பினர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு வகைகளில் நிதியை திரட்டி, அதை பகிர்ந்துள்ளனர். பயங்கரவாத செயல்களுக்காகவும் இந்த நிதி தரப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கான வரிச் சலுகை அளிக்கும் பதிவை, வருமான வரித் துறை ஏற்கனவே ரத்து செய்துள்ளது.இத்தகைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. உத்தர பிரதேசம், கர்நாடகா, அசாம் உள்பட பல மாநில முதல்வர்களும், தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, உத்தர பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, அசாம் உள்பட பல மாநில முதல்வர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பும், இதை வரவேற்றுள்ளது.
சமூக வலைதளம் முடக்கம்


பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பேஸ்புக், டுவிட்டர், யுடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட கணக்குகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த அமைப்பின் டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனம் முடக்கி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
29-செப்-202222:48:27 IST Report Abuse
Vijay D Ratnam "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்". என்ற திருவள்ளுவரின் வாக்கை இந்திய மக்கள் 2014 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து மதித்து நடக்கிறார்கள்
Rate this:
Cancel
29-செப்-202221:38:52 IST Report Abuse
kulandai kannan அவர்களும் ஒரு சாமானிய இந்து, பௌத்தர், ஜைனர், பார்சி போல் நடக்க ஆரம்பித்தால் இன்னொரு அமைப்பு தோன்ற முடியாது.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
29-செப்-202216:40:52 IST Report Abuse
Sampath Kumar ஒத்துழைப்பு ?/ நம்பிட்டோம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X